என் கணவர் ஒரு சைக்கோ.. அந்த விஷயத்துல என்னால தாங்க முடியல.. வலியில் துடித்த ராகுல் பிரீத் சிங்..!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் கடந்த 1990 ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான கில்லி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தடையற தாக்க என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதுதான் இவருடைய முதல் தமிழ் திரைப்படம். அதன் பிறகு புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே, அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கடந்த வருடம் Jackky Bhagnani என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண உறவு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை ராகுல் பிரீத் சிங்.

அவர் கூறியதாவது நான் என்னுடைய 33 வயது வரை சிங்கிளாக தான் இருந்தேன். நான் யாரையும் காதலிக்கவும் இல்லை.. டேட்டிங் செல்வது.. காதலிப்பது என யாருடனும் நெருக்கமாக இருக்க மாட்டேன்.

படம் முடிந்தால் வீடு.. வீடு முடிந்தால் படம்.. இதுதான் என்னுடைய வாழ்க்கை. மற்றபடி நான் அதிகமாக நேசித்தது என்னுடைய உடற்பயிற்சி கூடத்தை தான். என்னுடைய தோழிகள் எல்லோரும்.. ராகுல்.. நீ யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை.. உன்னை போல குறைவான உணவை சாப்பிட்டுக்கொண்டு.. தினமும் உடற்பயிற்சி கூடமே கதி என இருந்து கொண்டு இருக்கக்கூடிய ஒரு சைக்கோவை யாரும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என என்னை திட்டினார்கள்.

நான் என்னுடைய கணவர் Jackky Bhagnani-யை சந்திக்கும் போது.. அவரும் தன்னுடைய உடல் நலத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்.. தினமும் குறைவான உணவை சாப்பிடுபவர்.. தினமும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்பவர்.. என தெரிந்தது அப்போது அவரிடம் இப்படி எல்லாம் இருந்தால் சைக்கோ என்று என்னிடம் தோழிகள் என்னை திட்டுகிறார்கள். அப்படி என்றால் நீங்களும் சைக்கோ தானே.. சைக்கோவை சைக்கோ திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.. என்று அவரை திருமணம் செய்து கொண்டேன்.

ஆனால், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் என்னை விட அவர் அதிக விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார். சில நேரங்களில் கடினமான உடற்பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பார்.

அப்போதெல்லாம் நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். உடல் வலியால் துடித்திருக்கிறேன். ஆனாலும், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி என்பது முக்கியமான விஷயம் என பேசி இருக்கிறார் நடிகை ராகுல் பிரீத் சிங்.

Summary in English : Rakul Preet Singh recently opened up about her relationship, sharing that both she and her hubby are total fitness enthusiasts! It’s pretty adorable to hear how their friends tease them, calling them the “perfect pair.” They’re both super dedicated to staying fit and healthy, which just adds another layer of compatibility to their bond.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version