வசூல் சக்ரவர்த்தி ராமராஜன் பற்றி நீங்கள் அறியாதவை..!

தமிழ் சினிமாவுல இன்னைக்கு இருக்கக்கூடிய விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு ராமராஜன் என்ற நடிகரின் ஆளுமை என்ன என்று தெரிஞ்சிருக்குமா.? என்று கேட்டால் சந்தேகம் தான்.

20 வருடங்களுக்கு முன்னாடி அனைத்து தயாரிப்பாளர்களும் உச்சரித்த ஒரு பெயர் தான் ராமராஜன். ராமராஜனை வைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என அனைத்து இயக்குனர்களும் ஏங்கிய காலம் அது.

ரோஸ் பவுடர்.. லிப்ஸ்டிக்.. கலர் கலரான சட்டை.. மாட்டை நினைத்து பாட்டு பாடுவது.. ஆட்டுக்குட்டியை துண்டு போல தோள் மேல போட்டுகிட்டு நடப்பது என தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.

சினிமாவுக்காக பொதுப்பணித்துறையில் கிடைத்திருந்த வேலையை விட்டு விட்டு வந்தவர் தான் ராமராஜன். தன்னுடைய படங்களில் மது குடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காதவர்.

ஒரே நேரத்தில் 40 படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி சினிமாவின் உச்சாணி கொம்பில் அமர்ந்த மக்கள் நாயகன் ராமராஜன் பற்றிய மிக சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

1958 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓக்கூர் கிராமத்தில் இராமையா-வெள்ளையம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்தான் ராமராஜன்.

இவருடைய இயற்பெயர் குமரேசன் என்பதாகும். ராமராஜனுக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். ராமராஜனின் தந்தை ராமையா ஒரு நாடக நடிகர். இதனால் ராமராஜன் பிறந்த சில வருடங்களிலேயே அவரது குடும்பம் முழுவதும் சிவகங்கையில் இருந்து மதுரை மாவட்டம் மேலூருக்கு குடிபெயர்ந்தனர்.

மேலூர் அரசுப் பள்ளியில் தனது பள்ளி படிப்பையும்.. மேலூர் அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்த ராமராஜனுக்கு சிறுவயது முதலே சினிமா மீதான ஆர்வம் இருந்து வந்தது.

அதிகமான சினிமா படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறார். சினிமாவில் நடிகராக ஆசைப்பட்ட இவர் அவர் ஊரில் தொடங்கப்பட்ட அப்பல்லோ நாடக கலா மன்றம் என்ற நாடகக் குழுவில் இணைந்து நடிக்க தொடங்கினார். ஆசையின் விளைவு, இன்பமுறிவு போன்ற நாடகங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

பண்ணையார் மகள் என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார். தொடர்ந்து நாடகத்தில் நடித்து வந்த ராமராஜனுக்கு அடுத்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் சென்னைக்கு செல்ல வேண்டும் அங்கே யாரையும் தெரியாது என தயங்கிய ராமராஜன் தனது சினிமா ஆசையை மனதில் வைத்துக் கொண்டே நண்பர் ஒருவர் மூலம் மேலூரில் இருந்த சிட்டி சென்டர் திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தார். மேனேஜர் ஆபரேட்டர் என அனைத்து வேலைகளையும் செய்து வந்த ராமராஜன் அம்பலம் 22 ரூபாய் தான்.

அந்த சம்பளம் போதாத காரணத்தினால் புதிதாக திறக்கப்பட்ட கணேஷ் திரையரங்கில் 90 ரூபாய் சம்பளத்திற்கு சேர்ந்துள்ளார். பிணமாக நடித்தாலும் சினிமாவில் ஒரு சீனிலாவது நடித்துவிட வேண்டும் என்ற உறுதியோடு திரையரங்கில் வேலை செய்து கொண்டிருந்தார்.

தினமும் மூன்று ஷோ பார்த்து வந்த ராமராஜன் எம்.ஜி.ஆர் படங்களை விரும்பி பார்த்தது சினிமாவில் நடித்தால் அவரைப் போலவே கலர் கலராக ஆடை அணிய வேண்டும் என விரும்பியுள்ளார்.

திரைப்பட போஸ்டர்கள் மற்றும் திரைப்பட பெட்டிகளை வாங்குவதற்காக அடிக்கடி மதுரை சென்று வந்த ராமராஜன் திரைத்துறையினருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இயக்குனரும் தயாரிப்பாளருமான ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார்.

30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிந்த ராமராஜன். 1977 ஆம் ஆண்டு ராமநாராயணன் தயாரித்த மீனாட்சி குங்குமம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய சட்டத்தை திருத்துங்கள் என்ற படத்திலும் உதவி இயக்குனராக இருந்து கொண்டே சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ராமராஜன்.

1985 ஆம் ஆண்டு நடிகர் பாண்டியராஜன் இளவரசி நடிப்பில் வெளியான மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக முதன் முதலில் அறிமுகமானார்.

முதல் படமே வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து ஹலோ யார் பேசுறது என்ற படத்தை இயக்கினார் ராமராஜன். இந்த ஹலோ யார் பேசறது என்ற படத்தை பார்த்த பாரதிராஜா ராமராஜனிடம் தனக்காக ஒரு படத்தை இயக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்படி இயக்குனர் பாரதிராஜாவுடன் ராமராஜனுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. இயக்குனர் பாரதிராஜா மற்றும் கங்கை அமரனிடம் இணை இயக்குனராக இருந்து வந்த அழகப்பன் என்பவர் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் நாயகனை தேடி வந்த போது அவருக்கு இந்த படத்தில் ராமராஜன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என பரிந்துரை செய்தார் இயக்குனர் பாரதிராஜா.

இப்படித்தான் 1986-ம் ஆண்டு நம்ம ஒரு நல்ல ஊரு என்ற படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு ராமராஜனின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியல. தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார்.

Summary in English : Ramarajan is a name that resonates with many fans of Tamil cinema. Known for his unique style and memorable performances, he carved a niche for himself in the film industry during the late ’80s and early ’90s. Ramarajan started his career as a supporting actor but soon became a leading man, captivating audiences with his charm and relatable characters.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version