ராஷ்மிகாவின் ரகசிய வாழ்க்கை.. கசிந்த புகைப்படம்.. அம்பலமான உண்மை..!

தென்னிந்திய ரசிகர்களின் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, விஜய தேவரகொண்டா உடன் காதல் கொண்டிருப்பதாக விஷயங்கள் வெளி வந்த நிலையில் தற்போது மதிய உணவு சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்து இவர்கள் ரகசிய காதலை உறுதி செய்து இருக்கிறார்கள். 

கன்னட திரை உலகில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் மெச்சினார்கள். 

இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து இருவரும் சேர்ந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்திருந்ததோடு முத்தக் காட்சியில் நடித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். 

ராஷ்மிகாவின் ரகசிய வாழ்க்கை.. கசிந்த புகைப்படம்..

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும் இருவருக்குள் காதல் இருப்பதாகவும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும், ஊர் சுற்றுவதாகவும் சோசியல் மீடியாக்களில் கிசு கிசுக்கள் தொடர்ந்து வந்தது. 

இதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் காதலர்கள் இல்லை என்று கூறினாலும் இணையதள வாசிகள் இவர்களை விடுவதாக இல்லை. 

அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் தேவர கொண்டா மாலத்தீவு சென்றிருந்தது போல் ராஷ்மிகாவும் மாலத்தீவு சென்று இருந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்குக் காரணம் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவின் கூலரை போட்டுக் கொண்டு போட்டோ எடுத்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள் மும்பை விமான நிலையத்திற்கு விஜய் தேவரகொண்டா கூலர் போட்டோ அவர்களின் காதலை அம்பலப்படுத்தியதாக சொன்னார்கள். 

அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மதிய உணவு சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். இந்த போட்டோவில் ராஷ்மிகா நீல நிற பேங்க் டாப் அணிந்திருந்தார். 

அம்பலமான உண்மை..

அது மட்டுமல்லாமல் அதே நீல நிற உடையில் உணவு சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்ததை அடுத்து இவரது ரகசிய காதல் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள். விஜய் தேவரகொண்டாவின் விடி 12 படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. 

எனவே இந்த புகைப்படமானது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படமாக தான் இருக்கும் என்று இணையதளவாசிகள் கூறி அவர்களை கலாய்த்து வருகிறார்கள். 

மேலும் ராஷ்மிகாவும் விஜய்யும் காதலிப்பதை ஒத்துக் கொள்ளாமல் ரகசியமாக வைத்து வரும் இந்த வேளையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜய் தேவரகொண்டா சக நடிகருடன் டேட்டிங் சென்று இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்திருக்கிறார். 

அத்தோடு 35 வயதை தொட்டிருக்கும் இவர் நான் தனியாக இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? காதலிப்பதற்கு முன்பு வலுவான நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான் காதலை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன் என்று விவகாரமாக பதிலளித்தார்.

Summary in English: Rashmika Mandanna and Vijay Deverakonda have been the talk of the town lately, with dating rumors swirling around like crazy! Fans can’t help but speculate about their off-screen chemistry, especially after their adorable interactions during promotions and social media posts.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version