யாரு சாமி இவன்.. ஒரே வார்த்தைதான்… ஆர்.ஜே ஆனந்தியை கதறி அழ வைத்த முத்துக்குமரன்.. சிறப்பான சம்பவம் போல.!

இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் அதிகமான வரவேற்பு பெற்று வருபவராக முத்துக்குமரன் இருந்து வருகிறார் முத்துக்குமரன் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு அதன் மூலமாக வாய்ப்பு கிடைத்து சமூக வலைத்தளங்களில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் ஆவார்.

இந்த புகழை பயன்படுத்திதான் அவர் தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக தமிழில் பேசக்கூடியவர் முத்துக்குமரன் என்பதுதான் அவரைப் பற்றி பலருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது.

யாரு சாமி இவன்

இந்த நிலையில் போட்டியில் விளையாட பிக்பாஸ் போட்டியில் களம் இறங்கியது முதலே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் போட்டியாளராக முத்துக்குமரன் இருந்து வருகிறார். எந்த ஒரு தவறான வார்த்தைகளையும் பிரயோகப்படுத்தாமல் யார் மீதும் கோபப்படாமல் முத்துக்குமரன் சிறப்பாக ஆடி வருகிறார்.

இருந்தாலும் மக்கள் மத்தியில் தனித்து தெரியும் ஒருவராக முத்துக்குமரன் இருக்கிறார். முக்கியமாக பிக் பாஸ் கொடுக்கும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் சிறப்பாக தன்னுடைய விளையாட்டை விளையாடுகிறார் முத்துக்குமரன். அதேபோல அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகளிலும் மிக கவனமாக இருக்கிறார்.

ஆர்.ஜே ஆனந்தியை கதறி அழ வைத்த முத்துக்குமரன்

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் முத்துக்குமரனுக்கு ஆதரவாக ரசிகர்கள் உருவாகி வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் இதே போல முத்துக்குமரனின் செயலால் ஆர் ஜே ஆனந்தி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நடந்திருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை முத்துக்குமரன் எப்பொழுதும் அமைதியாகதான் இருப்பார். ஆனால் அவருடன் சண்டை போடுபவர்கள்தான் கண்ணீர் விட்டு அழுவது வழக்கமாக இருக்கும். அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக ஹோட்டல் நடத்த வேண்டும் என்கிற டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டது அதில் ஆண்கள் அணியினர் மற்றும் பெண்கள் அணியினர் இருவருமே ஹோட்டல் வைத்து நடத்தினர்.

சிறப்பான சம்பவம் போல

ஒருவர் ஹோட்டல் நடத்தும் பொழுது இன்னொரு அணியினர் அந்த ஹோட்டலுக்கு விருந்தினராக வருவதாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே ஆனந்தி வாடிக்கையாளராக வந்த முத்துக்குமரன் மீது குறை கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த முத்துக்குமரன் ஒரு ஹோட்டலுக்கு வருகிற வாடிக்கையாளர் தன்மையாக தான் அனைவரிடமும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. யார் வேணாலும் எந்த ஒரு மனநிலையிலும் வரலாம் அவர்கள் அனைவரையும் கையாளும் விதத்தில் வேலை ஆட்கள் இருக்க வேண்டும் என்று ஆர்.ஜே ஆன்ந்தியை குறை கூறினார். இதனால் கடுப்பான ஆர்.ஜே ஆனந்தி கடுப்பாகி அழ துவங்கிவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version