வெளி வந்த சொர்க்கவாசல் ட்ரைலர்.. ஏதோ மிஸ் ஆகுது கவனிச்சீங்களா?

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் செல்வராகவன் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் சொர்க்கவாசல் திரைப்படத்தின் டிரைலர் என்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து பணியாற்றி இருக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் வரும் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் என்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ட்ரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டார். 

இந்த ட்ரைலர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து படத்தின் கதை சிறையில் மையப்படுத்தி இருக்கும் என்பதை தெளிவாக ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். 

மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் இருந்த ஜெயிலில் கைதிகளுக்குள்ளும் சிறைத்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இந்த படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. 

இதை அடுத்து இந்த கதைக்களமானது 90-களில் நடப்பதை போல அமைந்திருக்கலாம் என்ற யூகம் ரசிகர்களின் மத்தியில் எழுந்திருப்பதோடு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்கிறது. 

தங்கலான், சர்பேட்டா பரம்பரை ஆகிய படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய செல்வா இந்த படத்தின் படத்தொகுப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

கிரிஸ்டோ சேவியர் இசை அமைப்பாளராக இந்த படத்திற்கு இசை அமைக்க சண்டைக் காட்சிகளை சுப்பராயன் வடிவமைத்திருக்கிறார். 

இந்த படத்தின் டிரைலர் நன்றாக இருப்பதால் படம் நன்றாக ஓடி நல்ல வசூலை குவிக்கும் என்று பலரும் கூறி இருப்பதை அடுத்து இந்த படம் ஆர் ஜே பாலாஜிக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். 

Summary in English: Hey there, movie buffs! Exciting news just dropped for all you fans of RJ Balaji and Selvaraghavan. The trailer for their much-anticipated film, “Sorgavaasal,” directed by the talented Sidharth Vishwanath, is finally here! If you’re not already buzzing with anticipation, you should be!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version