ஆடியன்ஸ் குடுக்குற காசு இதுக்கே சரியா போயிடும்.. GAME CHANGER குறித்து வாயை விட்ட S. J. Suryah..!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் எதுவுமே இதுவரை 1000 கோடி வசூல் என்ற இலக்கை எட்டியது கிடையாது. கண்டிப்பாக கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த இலக்கை எட்டும் என்று நம்புகிறார்கள் ரசிகர்கள்.

ஏனென்றால் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20ஆம் தேதி வரை தொடர்ச்சியாக பொங்கல் விடுமுறை. மட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் இயக்குனர் சங்கர் 92 கோடி செலவு செய்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .மி

கப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக கூடிய இந்த திரைப்படம் குறித்து இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் எஸ் ஜே சூர்யா சமீபத்தில் பேசியுள்ள பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை கேட்டு ரசிகர்கள் இப்படித்தான் கங்குவா படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் பேசிக்கொண்டு சுற்றினார். அதேபோல, நீங்களும் பேசுகிறீர்களே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அவர் கூறியதாவது கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. ஜருகண்டி ஜருகண்டி என்ற பாடல் அது. அந்த பாடல் எப்படியோ இணையத்தில் கசிந்து விட்டது.

அதனால் எதற்கு வம்பு என அந்த பாடலின் மேலோட்டமான சில காட்சிகளை மட்டும் ஒரு லிரிக்கல் வீடியோவாக ரிலீஸ் செய்து விட்டார் சங்கர். ஆனால், அந்தப் பாடல் காட்சியை நேற்று தான் பார்த்தேன்.

அதில் இருக்கக்கூடிய காட்சிகள் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும். குறிப்பாக ராம் சரணை பார்க்க கூடிய ரசிகர்கள் வாயை பிளக்க போகிறார்கள். அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் உயரப்போகிறது.

இன்னும் சொல்லப்போனால் ஆடியன்ஸ் கொடுக்கக்கூடிய காசுக்கு அந்த ஒரு பாடலே சரியாக போய்விடும். மீதி அவர்கள் பார்க்கக்கூடிய படம் முழுசும் போனஸ் தான் என்று கூறியிருக்கிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா.

படம் வெளிவதற்கு வெளியாவதற்கு முன்பே இப்படி வாய்விட்டு இருக்கும் நடிகர் எஸ். ஜே. சூர்யாவை பார்த்த ரசிகர்கள் படம் ரிலீஸ் ஆகட்டும் அதுவரைக்கும் கொஞ்சம் கம்முனு தான் இருங்களே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Summary in English : S.J. Suriya has really hit the nail on the head with his latest flick, Game Changer! Seriously, he’s been getting a lot of buzz for how incredible the song “Jaruganadi Jarugandi” is. If you’re a fan of catchy tunes and vibrant energy, this track alone is worth the ticket price! It’s that good! But here’s the kicker: Suriya himself mentioned that everything else in the movie is just a bonus. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version