அமரன் படத்தில் சாய் பல்லவி சம்பளம் இவ்வளவா? ஆடிப்போன திரையுலகம்..!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை சாய் பல்லவி. தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பழங்குடியின மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்தான் நடிகை சாய் பல்லவி.

ஆனால் ஆரம்பத்தில் தமிழில் சாய்பல்லவிக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மலையாள சினிமாவில்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் பிரேமம் என்கிற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் சாய் பல்லவி.

சாய்ப்பல்லவி அறிமுகம்:

அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருடைய மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார் சாய் பல்லவி.

அதன்பிறகு தமிழ்,தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் சாய் பல்லவிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் மலையாள சினிமாவை விடவும் தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் சம்பளம் அதிகம் என்பதால் தொடர்ந்து அவரும் இந்த இரண்டு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

சம்பளம் இவ்வளவா

பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அதில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருவார்கள். ஏனெனில் தெலுங்கு சினிமாவில் பொருத்தவரை அதிக கவர்ச்சி காட்டி நடித்தால்தான் அங்கு அதிக வரவேற்பு கிடைக்கும்.

ஆனால் அங்கு சென்றும் கூட கவர்ச்சி காட்டாமலே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் நடிகை சாய் பல்லவி. தமிழில் அவர் நடித்த மாரி 2 கார்கி மாதிரியான நிறைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கின்றன.

ஆடிப்போன திரையுலகம்

இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி. இந்த படத்தில் மிக அழகாக அவரை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் சாய்பல்லவி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சாய்ப்பல்லவி 3 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார். இவரை விட அதிகமாக தமிழில் படம் நடித்த நடிகைகள் கூட இன்னும் இவ்வளவு சம்பளம் வாங்க துவங்கவில்லை. இந்த நிலையில் சாய்பல்லவி 3 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறாரே என்று ஒரு பக்கம் பேசி வருகின்றனர்.

சாய் பல்லவி அளவிற்கு கூட நடிப்பு தெரியாத நடிகைகள் எல்லாம் தமிழ் சினிமாவில் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள் அப்படி இருக்கும் பொழுது சாய்பல்லவிக்கு கொடுத்த மூன்று கோடி ரூபாய் குறைவுதான் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version