இந்த மாதிரி எல்லாம் பண்ணுனா வாய்ப்பு வராது… நடிகைகளை வைத்து செய்த சாய்பல்லவி.!

தென்னிந்தியா சினிமாவிலேயே ஒரு முக்கிய நடிகையாக மாறியிருப்பவர் நடிகை சாய் பல்லவி. பெரும்பாலும் நடிகைகள் மக்கள் மத்தியில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக நிறைய விஷயங்களை செய்வார்கள்.

நிறைய முக அலங்காரங்கள் முகத்தில் செயற்கை சிகிச்சை முறைகள் இப்படி எல்லாம் செய்து முக அலங்காரத்தை அதிகப்படுத்தி அதன் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவார்கள்.

ஆனால் இப்பொழுது மக்கள் அப்படியான நடிகைகளை பெரிதாக கவனிப்பது கிடையாது. இயற்கையாகவே தங்களுக்கு என்ன அழகு இருக்கிறதோ அதை வெளிப்படுத்தும் நடுவில்தான் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

பண்ணுனா வாய்ப்பு வராது

அப்படியாகதான் நடிகை மஞ்சுவாரியர் இப்பொழுது அதிக வரவேற்பு பெற்று இருக்கிறார். அதே வரிசையில் சாய் பல்லவியும் இருந்து வருகிறார். இதை சாய்பல்லவியே நிறைய பேட்டிகளில் கூறி இருக்கிறார். அவர் அந்த பேட்டிகளில் கூறும் பொழுது வெள்ளையாக இருப்பது ஒன்றும் பெரிய அழகு கிடையாது.

இயற்கையாக நாம் எப்படி இருக்கிறோமோ அதுதான் நம்முடைய அழகு இயற்கையாக ஒருவருக்கு இருக்கும் அழகை நேசிக்க பழகிக் கொள்ளுங்கள் என்று பேசியிருக்கிறார் சாய் பல்லவி. இந்த நிலையில் மற்ற நடிகைகள் செய்யும் ப்ரோமோஷன் விஷயங்களை கூட சாய் பல்லவி செய்வது கிடையாது என்பது சமீபத்தில் அவர் கூறிய பேட்டியின் மூலமாக தெரிந்தது.

வைத்து செய்த சாய்ப்பல்லவி

ஒவ்வொரு நடிகையும் தங்களை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக பி.ஆர் என்கிற ஒரு நபரை வைத்திருப்பார்கள். சில நிறுவனங்கள் இதற்காகவே பி.ஆர் வேலைகளை செய்து வருவது உண்டு.

இந்த நிலையில் சாய்பல்லவிக்கு இதே போல ஒரு நிறுவனத்தில் இருந்து போன் செய்து பி.ஆர் வேலையை நாங்கள் செய்து தருகிறோம் என்று கூறி இருக்கிறார்கள். பி.ஆர் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சாய் பல்லவி கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் உங்களை நாங்கள் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருவோம். உங்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளை இல்லாமல் இருக்கும்போது கூட மக்கள் மத்தியில் உங்களை பிரபலப்படுத்துகிறோம் என்று கூறியிருக்கின்றனர்.

ட்ரெண்டாகும் வீடியோ:

இதனால் எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா? என்று கேட்டிருக்கிறார் சாய் பல்லவி. வாய்ப்புகள் கிடைக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் உங்களை பேசிக்கொண்டிருப்பார்கள் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர் அப்படி என்றால் எனக்கு இது வேண்டாம் மக்கள் தொடர்ந்து என்னை பேசிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு அது போரடித்து விடும் என்று கூறியிருக்கிறார் சாய் பல்லவி. இந்த விஷயத்தை அவர் இந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version