கிளாமருக்கு NO சொன்ன சாய் பல்லவியா இது..? சும்மா தூக்குதே.. மிரண்ட ரசிகர்கள்..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் நடிகை சாய் பல்லவி தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடன போட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவருக்கு அந்த திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.

தென்னிந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை சாய் பல்லவி. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிக்கக்கூடிய தெலுங்கு திரைப்படங்கள் மலையாள திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன. ஆனால், இவர் நடித்த எந்த தமிழ் திரைப்படமும் ரசிகர் மத்தியில் போதுமான வரவேற்பை, எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் பிரபலமானதை தொடர்ந்து இவர் நடனமாடி இருந்த பழைய வீடியோ காட்சிகள் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலானது.

ஏனென்றால், பிரேமம் திரைப்படத்தில் புடவை சகிதமாக குடும்ப பாங்கினியாக நடித்திருப்பார் நடிகை சாய் பல்லவி. ஆனால், இவர் தன்னுடைய இளம் வயதில் குட்டியான ட்ரவுசர் போன்ற ஆடை அணிந்து கொண்டு படுகிளாமரான ஆட்டம் போட்டு இருப்பார்.

இது குறித்து பேசிய நடிகை சாய் பல்லவி. அந்த நடனத்திற்கு ஏற்ற ஆடை அதுதான். அப்படி நடனத்தை ஆடும்போது புடவை கட்டிக் கொண்டு பெரிய பேண்ட் அணிந்து கொண்டு ஆட முடியாது.

ஆனால், அதனை புகைப்படமாக மாற்றி.. ஜூம் செய்து.. ஃபோகஸ் செய்து.. மோசமான முறையில் இணையத்தில் பரப்பினார்கள். அதன் பிறகு கிளாமரான ஆடைகளை அணிவதை நான் தவிர்த்து விட்டேன்.

எனக்கு புடவை தான் பொருத்தமான உடை என்று பேசியிருந்தார். மேலும் படங்களிலும் கிளாமரான உடைகள் அணிவதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், அவருடைய தங்கையின் திருமண நிகழ்வில் தோன்றிய அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதனை பார்த்து ரசிகர்கள் நேச்சுரல் ப்யூட்டி.. கிளாமருக்கு NO சொன்ன சாய் பல்லவியா இது..? சும்மா தூக்குதே.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

Summary in English : Sai Pallavi, the beloved actress known for her stunning performances and down-to-earth personality, recently stole the spotlight at her sister’s wedding. Dressed in a gorgeous sleeveless dress that perfectly showcased her natural beauty, she looked absolutely radiant as she celebrated this special occasion.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version