அந்த விஷயத்தில் ஆம்பளங்களை நம்பவே கூடாது..! வார்னிங் கொடுத்த சாய்பல்லவி…

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் பல நடிகைகளுக்கு முக்கிய திரைப்படமாக இருந்தது. அப்படியாக நடிகை சாய் பல்லவிக்கும் அது முக்கியமான படமாக இருந்தது.

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் தென்னிந்திய அளவில் பெரிய வரவேற்பு பெற்றது. அதற்குப் பிறகு அது வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அந்த அளவிற்கு வெற்றியை கொடுத்த அந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் என்கிற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார்.

ஆம்பளங்களை நம்பவே கூடாது

சாய் பல்லவி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் கூட அவருக்கு முதலில் வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் பிரேமம் திரைப்படம்தான் அதற்குப் பிறகுதான் அவருக்கு தமிழிலேயே வாய்ப்புகள் கிடைத்தது.கொடைக்கானலில் உள்ள படுகா என்கிற பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் சாய் பல்லவி.

நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக மாறியிருப்பவர் சாய் பல்லவிதான். சாய் பல்லவி தொடர்ந்து நல்ல நல்ல கருத்துக்களை கூறுவதனாலேயே அவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர்.

வார்னிங் கொடுத்த சாய்பல்லவி

பெரும்பாலும் பேட்டிகளில் பேசும் சாய் பல்லவி தொடர்ந்து பேசுகிற விஷயங்கள் மற்ற நடிகைகளில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். இந்த நிலையில் அவரிடம் உங்களை யாராவது பார்த்து அழகாக இருக்கிறார்கள் என்று கூறினால் அவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? என்று கேட்கப்பட்டது.

அந்த பேட்டியில் பதில் கூறிய சாய்பல்லவி கூறும் பொழுது ஒரு பெண் என்னை பார்த்து அழகாக இருக்கிறேன் என்று கூறினால் அதை நம்புவேன். ஆனால் ஒரு ஆண் அப்படி கூறினால் அதை நம்ப மாட்டேன் ஏனென்றால் ஆண்கள் பெரும்பாலும் பெண்களை பார்த்தால் அழகாக இருப்பதாகத்தான் கூறுவார்கள் என்று பதில் அளித்து இருந்தார். அந்த பதில்தான் இப்பொழுது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version