வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய Lyca..! விடாமுயற்சி குறித்து புது அப்டேட்..!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படம் கருந்த வருடமே வெளியாக வேண்டியது.

ஆனால் சில பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் 2025 பொங்கல் என்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம் அடுத்து தொடர்ந்து பத்து நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் முந்தைய அஜித் படங்களை மிஞ்சும் அளவுக்கு அமைய வாய்ப்பு இருக்கிறது என்றும் ரசிகர்கள் நம்பி காத்திருந்தனர்.

ஆனால், கடைசி நேரத்தில் அதுவும் புத்தாண்டு தினத்தன்று படத்தின் வெளியிட்டை தள்ளிப் போடுவதாக அறிவித்தது லைகா நிறுவனம். இது ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

இந்த விரக்த்தியிலிருந்து அஜித் ரசிகர்கள் வெளிவந்தார்களா..? என்று கேட்டால் இன்னும் இல்லை என்று தான் கூற வேண்டும். இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தின் சவடீகா என்ற சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியானது.

இசையமைப்பாளர் அனிருத் பாடகர் ஆண்டனி தாஸன் ஆகியோர் கூட்டணியில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த பாடல் தற்போது ஒரு கோடி பார்வையாளர்களை எட்டி இருக்கிறது என்று ஒரு அறிவிப்பை தன்னுடைய அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது லைகா நிறுவனம்.

இதனை பார்த்த ரசிகர்கள், லைகா நிறுவனத்தை வண்டை வண்டையாக விட்டு விலாசி வருகின்றனர். படத்தின் ரிலீஸ் தள்ளிப் போட்டுவிட்டு பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை வென்று விட்டது என்று புலகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறீர்கள்..! இது உங்களுக்கு நியாயமா..? என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு லைகா நிறுவனத்தை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

அஜித் பாடல் ஒரு மைல்கல்லை கடந்துள்ளது மகிழ்ச்சி. ஆனால், அதை அறிவித்து கொண்டாடும் மனநிலையில் அஜித் ரசிகர்கள் இல்லை என்பதை இது காட்டுகிறது.

Summary in English : When Lyca Productions tweeted about the Sawatika song hitting 10 million views on YouTube, fans couldn’t help but feel a mix of excitement and tension. It’s always thrilling to see a song reach such a milestone, but the timing had everyone on edge. Just recently, the production house announced that they were postponing the release of their much-anticipated movie, Vidaamuyarchi.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version