ஒரு படத்துல நடிக்கணும்ன்னு கூப்டுவாங்க.. ஆனா.. நிஜமாவே படுக்கையில் என்னை.. ஷகீலா ஓப்பன் டாக்..!

நடிகை ஷகிலா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தன்னுடைய சுயசரிதையும் எழுதியிருந்தார். இவருடைய சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படமும் வெளியாகி இருக்கிறது.

அதில் பல்வேறு ரகசியங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை ஷகிலா. அவை மிகப்பெரிய பேசுபொருளானது. அதாவது, ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைத்துச் செல்வார்கள்.

அந்த படத்திற்கான காட்சிகளை படமாக்கிவிட்டு சம்பளத்தை கொடுத்து அனுப்பி விடுவார்கள். ஆனால், நிஜத்தில் என்ன நடக்கும் என்றால்.. அந்த ஒரு படத்தின் சம்பளத்தை கொடுத்து ஒரே படம் தான் என்று கூறி நான்கு வெவ்வேறு படங்களுக்கான காட்சிகளை படமாக்கி கொள்வார்கள்.

அதன்பிறகு அந்த காட்சியை நான்கு வெவ்வேறு படங்களில் பயன்படுத்துவார்கள். அந்த நான்கு படங்களிலும் நான் நடித்திருக்கிறேன் என விளம்பரம் செய்து அந்த படத்தை வியாபாரம் செய்வார்கள்.

ஆனால், எனக்கு ஒரே ஒரு படத்திற்கு தான் சம்பளம் கொடுத்திருப்பார்கள். இப்படியும் பலமுறை நான் ஏமாந்து இருக்கிறேன்.

அந்த நேரத்தில் என் மீது பொதுவெளியில் வெறுப்பு இருந்தது. இந்த கொடுமையை சொன்னால் எனக்கு ஆதரவாக முடிவு வருமா..? என்று எனக்கு தெரியவில்லை. அதனால் பயந்து கொண்டு நான் அதை பற்றி வெளியே பேசவில்லை.

ஆனால், இந்த 2024ல் இந்த பிரச்சனைகள் நடந்திருந்தால் அதை பொதுவெளியில் செல்வதற்கு நமக்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்த காலத்தில் எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதனால் நான் பலமுறை ஏமாற்றப்பட்டு இருக்கிறேன்.

இந்த காலத்தில் நடிக்க காசு கொடுத்துவிட்டு அந்த காட்சிகளை நான்கு படத்தில் பயன்படுத்தினால் நாம் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடுக்க முடியும். அப்படியான வசதிகள் இன்று இருக்கின்றன.

ஆனால், அன்று இப்படியான விஷயங்கள் எதுவுமே இல்லை என பதிவு செய்திருக்கிறார். இப்படியாக நான் பலமுறை ஏமாற்றப்பட்டு பொருளாதார இழப்புகளை சந்தித்து இருக்கிறேன் எனவும் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய ஷகிலா நிறைய முறை படப்பிடிப்பு தளங்களில் படுக்கை அறை காட்சிகளில் நடக்கும் பொழுது சில நடிகர்கள் நிஜமாகவே என்னுடன் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

அப்படியான நேரங்களில் அவர்களை தள்ளிவிட்டு நான் எழுந்து வந்து விடுவேன். இப்படியான விஷயங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடந்திருக்கின்றன.

நிஜமாகவே அப்படி என்னிடம் நடந்து கொள்ள முயற்சி செய்து விட்டு காட்சி தத்துரூபமாக வரவேண்டும் என அப்படி செய்தேன் என கூறுவார்கள்.

ஒரு நடிகையாக அவர் நடிக்கிறாரா..? அல்லது நிஜமாகவே என்னுடன் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்கிறாரா..? என்பது மிக நன்றாக தெரியும்.

இப்படியும் என்னுடைய சில திரைப்படங்கள் மோசமாக அனுபவமாக அமைந்திருக்கிறது என பல்வேறு ரகசியங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார் என்று ஷகிலா.

Summary in English : In a candid revelation, actress Shakeela opened up about her early struggles in the film industry, shedding light on the harsh realities that many aspiring actors face. Despite her undeniable talent and charisma, Shakeela encountered numerous challenges that tested her resilience. She spoke about being cheated by producers and directors who promised opportunities but often failed to deliver, leaving her feeling disillusioned and frustrated.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version