8 வயதில் குழந்தை.. மாரியார் கொடுமை பண்ணும் உமா ரியாஸ்.. கதறும் ஷாரிக் மனைவி..!

In a recent interview, actress Uma Riyaz Khan made headlines by encouraging her daughter-in-law, Mariya Jeniffer, to communicate in Tamil.

திரையுலகில் பிரபல நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் ரியாஸ் கான் மற்றும் அவருடைய மனைவி உமா ரியாஸ்.

இவர்களுடைய மகன் ஷாரிக் ஹாசன் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானார்.

இந்நிலையில், சமீபத்தில் மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த மரியா ஜெனிஃபருக்கு ஏற்கனவே திருமணமாகி எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த பின்னர் கணவரை பிரிந்த மரியா ஜெனிஃபர் தற்போது ஷாரிக்கிய காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

அதே சமயம் மரியா ஜெனிஃபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதோ… அல்லது அவருக்கு 8 வயது மகள் இருக்கிறார் என்பதோ,, எனக்கு கவலை கிடையாது என பேசி இருக்கிறார் ஷாரிக்.

இந்நிலையில், ஷாரிக்கை திருமணம் செய்து கொண்டது பற்றி அவருடைய மனைவி மரியா ஜெனிஃபர் அளித்துள்ள பேட்டியில், நான் மறுமணம் செய்து கொண்டால் என்னுடைய குழந்தையை கணவர் குடும்பத்தினர் ஏற்க மாட்டார்கள் என்ற பயம் இருந்தது.

ஆனால் ஷாரிக்கும் சரி.. அவருடைய பெற்றோரும் சரி.. தன் மகளை சிறப்பாக பார்த்துக் கொள்வதாகவும்.. ஷாரிக் சிறப்பான தந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதே பேட்டியில், ஷாரிக்கின் அம்மா, உமா ரியாஸ் தன்னுடைய மருமகள் மரியாவை தமிழில் பேசுமாறு கூறினார். தன்னுடைய, தமிழ் அந்த அளவுக்கு இருக்காது என்று கூறிய மரியா.. அடுத்த நிமிடமே எனக்கு தமிழ் சரியாக பேச வராது என்று என் மாமியாருக்கு தெரியும்.. ஆனாலும் தமிழில் பேச சொல்லுங்கள் என்று அவர் கூறுகிறார்.. மாமியார் கொடுமை செய்கிறார் என்று சிரித்தபடியே பகடி செய்யும் விதமாக பதில் கொடுத்து இருக்கிறார்.

இவருடைய இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : In a recent interview, actress Uma Riyaz Khan made headlines by encouraging her daughter-in-law, Mariya Jeniffer, to speak in Tamil. This moment not only highlighted the importance of linguistic heritage within families but also underscored the cultural significance of the Tamil language in contemporary society.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version