முதல் முறை அப்படித்தான் இருக்கும்.. தூக்கி போட்டு பண்ணுடா.. இளம் நடிகருக்கு SIMRAN கொடுத்த ஷாக்..!

SIMRAN : தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கு மேலாக முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நடிகை சிம்ரன்.

நடிகை சிம்ரனின் சிறப்பம்சம் என்ன என்று கேட்டால் முன்னணி நடிகர்களுடன் மட்டும் தான் நடிப்பேன் என்று எந்த ஒரு விதிமுறையும் விதிக்காமல் கதையும் கதாபாத்திரமும் தனக்கு பிடித்தது போல் இருந்தால் புதுமுக நடிகராக இருந்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்க தயாராக இருப்பார் நடிகை சிம்ரன்.

ஆனால், இவருடைய இந்த வெற்றிக்கான சூத்திரத்தை இன்று பல நடிகைகள் மறந்து விட்டார்கள். என்ன காரணம் என்றால் ஒன்று இரண்டு படங்களில் நடித்தாலே கோடிக்கணக்கில் சம்பளங்கள் நடிகைகளின் வங்கி கணக்கை நிரப்பி விடுகிறது.

முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றதும் முன்னணி நடிகர்களுடன் மட்டும் தான் நடிப்பேன் அறிமுக நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று பந்தா காட்டும் நடிகைகள் தான் அதிகம் இருக்கிறார்கள்.

இதன் பயனாக நான்கு ஐந்து வருடங்களில் சினிமாவில் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போய்விடுகிறார்கள். இந்நிலையில், பிரபல நடிகர் சாம் ஹீரோவாக நடித்த திரைப்படம் குறித்து சமீபத்தில் தன்னுடைய பேட்டி ஒன்றில் நடிகை சிம்ரனுடன் நடித்த அனுபவம் குறித்து பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது உண்மையைச் சொன்னால் 12B படத்தில் நடிகை சிம்ரனுடன் நான் நடிக்கப் போகிறேன் என்று தெரிந்ததும் எனக்கு பயமாக இருந்தது. ஏனென்றால், நான் அப்போதுதான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறேன்.

ஆனால் நடிகை சிம்ரன் ஒரு மிகப்பெரிய ஜாம்பவான். அவருடன் படத்தில் சேர்ந்து நடிப்பதா என்ற ஒரு தயக்கம் எனக்குள் இருந்தது. ஒரு வழியாக அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

படப்பிடிப்பு தளத்தில் நான் நிறைய முறை கேக் வாங்கினேன். ஆனால், நடிகை சிம்ரன் ஒரே டேக்கில் காட்சிகளை ஓகே செய்து விட்டு போய்க் கொண்டே இருப்பார். என்னுடன் நடிக்கும் காட்சிகள் வரும் போது என்னால் அவரும் நிறைய டேக்குகள் நடிக்க வேண்டி இருந்தது.

ஆனால் அதனை ஒரு கஷ்டமாக பொருட்படுத்தாமல் எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நிறைய ஆலோசனைகளை வழங்கினார். முதல் படம்.. முதல் முறை பண்ணும் போது இப்படித்தான் இருக்கும்.. நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்தேன்.

என்ன.. நான் 10 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவிற்கு வந்து விட்டேன். நீ இப்போதுதான் வருகிறாய்.. அவ்வளவுதான் வித்தியாசம்.. பயத்தை தூக்கி போட்டு தைரியமா பண்ணுடா.. என்று எனக்கு ஊக்கம் கொடுத்தார்.

அவருடைய ஊக்கம் எனக்கு அந்த படத்தை முடிப்பதற்கு உறுதுணையாக இருந்தது. உண்மையை சொன்னால் நடிகை சிம்ரனின் இந்த குணம் என்னை ஷாக் ஆகியது என பேசி இருக்கிறார் நடிகர் சாம்.

Summary in English : Actress Simran’s unwavering support for her co-star, actor Shaam, during the shooting of his debut movie “12B” is a testament to the camaraderie and encouragement that thrives in the film industry. As seasoned professionals, both actors understand the challenges that come with stepping into new roles and navigating the complexities of film production.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version