சினிமாவுக்கு வர ஐடியாவே இல்ல?.. என் கனவு இதுதான்.. முதன் முறையாக ரகசியத்தை உடைத்த சிவகார்த்திகேயன்..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாக தான் அமைந்து வருகின்றன.

மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 12 வருடங்கள்தான் ஆகின்றன. ஆனால் தற்சமயம் நடிகர் விஜய் சேதுபதி தனுஷ் மாதிரியான முன்னணி நடிகர்களை விட அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார் சிவகார்த்திகேயன்.

சினிமாவுக்கு வர ஐடியாவே இல்ல

அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்து வருகின்றன. அவருக்கு முன்பு சினிமாவில் இருக்கும் தனுஷிற்கு கூட அப்படியான வெற்றி படங்கள் அமையவில்லை. இந்த நிலையில் விஜய் அடுத்து அரசியலுக்கு செல்லும் நிலையில் அந்த இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.

சிவகார்த்திக்கேயனும் தொடர்ந்து ஒரு காமெடி நடிகர் என்னும் பாணியில் இருந்து மாறி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்க துவங்கியிருக்கிறார். தற்சமயம் அவர் நடித்துவரும் அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியஸான கதைக்களத்தை கொண்ட திரைப்படம் ஆகும்.

என் கனவு இதுதான்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய உண்மையான ஆசை என்ன என்பது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது கல்லூரி முடித்த பிறகு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது.

இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐ.பி.எஸ் எக்ஸாம் தேர்வுக்காக தயாராக வேண்டும் என்று இருந்தேன். ஆனால் எனது தாய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை ஏனெனில் காவல்துறையில் இருந்துதான் எனது தந்தை உயிரிழந்தார். நானும் அந்த மாதிரி காவல்துறை தொடர்பான வேலைக்கு செல்லக்கூடாது என்று எனது அம்மா கூறிவிட்டார்.

அதனால்தான் பிறகு திரைத்துறையை தேர்ந்தெடுத்து இங்கு வந்தேன் இல்லையென்றால் இந்நேரம் ஐ.பி.எஸ் படிக்கதான் சென்று இருப்பேன் என்று கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version