“விஜய் துப்பாக்கியை கொடுக்கல..” ட்விஸ்ட் அடித்த சிவகார்த்திகேயன் சொல்றத கேளுங்க..!

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான The GOAT திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்ற பின்னணி இசை மற்றும் சிவகார்த்திகேயனின் கெஸ்ட் ரோல் போன்றவை இந்த படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்பட்டது.

குறிப்பாக படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனிடம் நடிகர் விஜய் துப்பாக்கியை ஒப்படைத்து இது இனிமேல் உங்களுக்கு தான் தேவைப்படும். இதை நீங்க வச்சுக்கோங்க என்று கூறுவார்.

அப்போது சிவகார்த்திகேயன் உங்களுக்கு இதைவிட வேறு ஏதும் முக்கியமான வேலை இருக்கும்ன்னு நெனைக்கிறேன். அதை போய் நீங்க பார்த்துக்கோங்க.. இதை நான் பார்த்துக்கிறேன் என்று கூறுவார்.

இதை நிஜ வாழ்க்கையோடு ரசிகர்கள் தொடர்பு படுத்திக் கொண்டார்கள் நடிகர் விஜய் சினிமாவிலிருந்து விலகிய அரசியலுக்கு செல்ல உள்ள நிலையில் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு செல்கிறார் என்பது போல தொடர்பு படுத்திக் கொண்டார்கள் ரசிகர்கள்.

மறைமுகமாக இது சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டையும் உருவாக்கி கொடுத்திருக்கிறது. தற்போது அவருடைய நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது.

மேலும் கோட் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த காட்சி இவருடைய திரை பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு இவரை கொண்டு சென்றுவிட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இது குறித்து என்ன கூறுகிறார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்டபோது, பலரும் கோட் படத்தில் விஜய் துப்பாக்கியை கொடுத்தார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அவர் என்று எனக்கு கொடுத்தது அவருடைய முழுமையான அன்பை. யோசித்து பாருங்கள்.. அவ்வளவு பெரிய நடிகர்.. என்னை போன்ற ஒரு சிறு நடிகருக்கு அவருடைய படத்தில் ஒரு இடத்தை கொடுத்து.. வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத அளவுக்கான ஒரு காட்சியையும் கொடுத்து இருக்கிறார்.

விஜய் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு சிறு நடிகனுக்காக தன்னுடைய உயரத்தில் இருந்து இந்த விஷயத்தை செய்திருக்கிறார் என்று பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது.

அவர் என் மீது வைத்திருக்கும் அன்பை நான் காப்பாற்றுவேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்.. என தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

Summary in English : Actor Sivakarthikeyan’s heartfelt statement about his experience working with the legendary Vijay in their recent film, “Goat,” resonates deeply with fans and industry insiders alike. He emphasized that rather than merely sharing a prop or a weapon for the movie, Vijay bestowed upon him something far more valuable—his pure love and support. This sentiment highlights the camaraderie and mutual respect that exists within the film fraternity.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version