காலேஜ் படிக்கும்போது சூர்யா.. மேடையில் மானத்தை வாங்கிய சிவக்குமார்.. தலையில் கை வைத்த சூர்யா.!

நடிகர் சூர்யா இளம் வயதில் இருந்தே சினிமாவில் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் ஆவார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் மிகப் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என்று மூன்று நடிகர்களுக்கான போட்டியாகதான் இருந்து வந்தது. ஆனால் விஜய்யும் அஜித்தும் ஆக்ஷன் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிய பிறகு சூர்யா மட்டும் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து பிதாமகன் மாதிரியான படங்களில் நடித்து வந்தார்.

காலேஜ் படிக்கும்போது சூர்யா

அதனால் சூர்யாவின் மார்க்கெட் கொஞ்சமாக குறைந்தது. இதனால் அஜித், விஜய், சூர்யா போட்டியிலிருந்து சூர்யா விலக்கப்பட்டார்.

இருந்தாலும் கூட பெண்கள் மத்தியில் இன்னமுமே சூர்யாவிற்கான ரசிகர் கூட்டம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. தற்சமயம் கங்குவா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்த திரைப்படம் இவரது சினிமா திரைப்பட வாழ்க்கையில் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை இயக்கி வருகிறார். வருகிற தீபாவளி அன்று இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

மானத்தை வாங்கிய சிவக்குமார்

புக்கிங் ஓபன் ஆன நிலையில் ஏற்கனவே இந்த திரைப்படம் முக்கால்வாசி புக்கிங் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவக்குமார் பேசும்பொழுது சூர்யா குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பேசி இருந்தார்.

சூர்யா கல்லூரியில் பி.காம்தான் எடுத்து படித்தார். படிக்கும் பொழுது அவருக்கு நான்கு அரியர்கள் இருந்தன. அத்தனை அரியர்கள் இருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது மானத்தை வாங்கி விடாதே மகனே என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

தலையில் கை வைத்த சூர்யா

அதேபோல கல்லூரி முடிப்பதற்குள்ளாக எனக்கு அந்த அரியர் அனைத்தையும் முடித்து கொடுத்துவிட்டார சூர்யா என்று வெளிப்படையாக கூறியிருந்தார் சிவக்குமார். அதனை கேட்டு தலையில் கையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு சிரித்து இருக்கிறார் சூர்யா. அந்த வீடியோ இப்பொழுது பிரபலமாக துவங்கியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version