யாரு அந்த சார்..? அண்ணா பல்கலை மாணவி கொடுமை..! முதல் ஆளாக குரல் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்..!

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகம் முழுதும் பொதுமக்களால் கேட்கப்படக்கூடிய ஒரே கேள்வி “யார் அந்த சார்?..” என்பது தான்.

கடந்த ஒரு வாரமாக யார் அந்த சார்..? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். இது சம்பந்தப்பட்டு நிறைய தகவல்கள் இணைய பக்கங்களிலும் ஊடகங்களிலும் வருகின்றன.

ஆனால், அதனை சம்பந்தப்பட்ட துறையினர் போலியானது என மறுக்கின்றனர். இப்படி நாடு முழுதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது இந்த யார் அந்த சார்..? என்ற கேள்வி.

இதற்கு முக்கிய காரணம்.. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தன்னுடைய காதலனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கே வந்த மர்ம ஆசாமி ஒருவன் இருவரும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்து இதனை பெற்றோர்களிடமும் கல்லூரி நிர்வாகத்தில் இடமும் காட்டி விடுவதாக மிரட்டி அந்த பெண்ணை அதே இடத்தில் வைத்து பாலியல் ரீதியாக கொடுமை செய்திருக்கிறான்.

ஞானசேகரன் என்ற ஆசாமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னை மிரட்டும் போது என்னை போலவே அந்த சாருடனும் நீ ஒன்றாக இருக்க வேண்டும் அப்போதுதான் உனக்கு பாதுகாப்பு. இல்லை என்றால் இந்த உன் காதலனுடன் நீ தனிமையில் இருந்த வீடியோவை நான் உன்னுடைய பெற்றோரிடமும் கல்லூரி நிர்வாகத்திடமும் கொடுத்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனை பாதிக்கப்பட்ட மாணவி தன்னுடைய புகாரில் தெளிவாக கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் அந்த சார் யாரு..? என்ற கேள்விதான் இன்று தமிழகம் முழுதும் ஒலித்து கொண்டிருக்கிறது.

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சட்டையில் யார் அந்த சார்…? என்ற பேட்ஜ்-ஐ அணிந்து கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், அந்த சார் யாராக இருந்தாலும் நாம் பாதிக்கப்பட்ட மாணவியுடன் நிற்போம் என்று ஒரே வார்த்தையில் பதில் கொடுத்து அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்கிறார்.

வடநாட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எல்லாம் குரல் கொடுக்கும் தமிழ் நடிகர்கள். தமிழ்நாட்டில் நடந்த இந்த அலங்கோலத்திற்கு இதுவரை வாய் திறக்கவே இல்லை. இந்நிலையில் முதல் நாளாக நடிகர் சிவகார்த்திகேயன் இது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பதிவு செய்திருப்பது பொது மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

Summary in English : Sivakarthikeyan, the beloved actor and comedian, recently took to social media to voice his concerns over the tragic events at Anna University. His heartfelt message resonated with many fans and students alike, highlighting the importance of safety and support within educational institutions

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version