“இப்படித்தான் பிரஷாந்த், அப்பாஸ் சோலியை முடிச்சாங்க..” நடிகர் Srikanth பேச்சு..!

நடிகர் Srikanth சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் சுந்தர் சி தன்னை பற்றி கூறிய ஒரு விஷயம் குறித்தும்.. அதற்கு காரணம் என்ன என்பது குறித்தும்.. பேசி இருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் இப்படித்தான் பிரசாந்த், அப்பாஸ், கரண் போன்ற முன்னணி நடிகர்களின் சோலியை முடித்தார்கள் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

முன்னதாக ஒரு பேட்டியில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி-யிடம் நீங்கள் இந்த நடிகருடன் சேர்ந்து பணியாற்றவே விரும்பமாட்டேன் என்று கூறினால் அந்த நடிகர் யார்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்த நடிகர் சுந்தர் சி.. நடிகர் ஸ்ரீகாந்த் உடன் நான் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்திடம் சுந்தர் சி உங்களுடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று சொல்வதற்கு என்ன காரணம்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஸ்ரீகாந்த், இதற்கு உண்டான பதிலை நான் சுந்தர் சி இடமே கேட்டு பெற்றேன். காபி வித் காதல் திரைப்படத்தில் அவருடைய இயக்கத்தில் தான் நான் நடித்தேன். அந்த படத்தில் நடித்த போது அவரிடம் இது குறித்து பேசினேன்.

அப்போது சுந்தர் சி என்ன சொன்னார் என்றால்.. நான் அன்பே சிவம் படத்தை இயக்கி முடித்த பிறகு என்ன செய்வது என தெரியாமல் இருந்தேன். சரி புதுமையாக ஒரு காதல் கதை பண்ணலாம் என்று யோசித்தேன். அதற்கு ஸ்ரீகாந்த் ஹீரோவாக இருக்கும் என்று நினைத்தேன். அதற்காக உங்களை அணுகினேன்.

ஆனால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு உங்களுடைய உறவினர் ஒருவர்தான் உங்களுடைய சினிமா கால் சீட்டை மேனேஜ் செய்கிறார் என்று தெரிந்தது.

அதன் பிறகு அவரை தொடர்பு கொண்டேன். அவர் என்னிடம்.. முதலில் என்கிட்ட கதை சொல்லுங்க எனக்கு கதை பிடிச்சிருந்தா..? நான் ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லுவேன் என்று கூறினார்.

ஒரு இயக்குனராக நடிகர்களிடம் கதை சொல்வது என்னுடைய கடமை. ஆனால் அவர்களுடைய மேனேஜர்கள் அவருடைய உறவினர்களிடம் நான் கதை சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

அது என்னுடைய தன்மானத்திற்கு இழுக்காக நான் பார்க்கிறேன். ஒரு கதை என்பது மிகவும் ரகசியமான ஒரு விஷயம். அதனை நடிகர்களின் மேனேஜர்கள் உறவினர்கள் இவர்களிடம் எல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது.

நேரடியாக நடிகர்களிடம் கூறினால் தான் அவர்களுக்கு அந்த கதையின் தன்மை அந்த கதையின் ஆழம் இவை எல்லாம் புரியும். எனவே அந்த படத்தில் ஸ்ரீகாந்த் வேண்டாம் என வேறு ஹீரோவை நான் தேர்வு செய்து விட்டேன்.

உங்களுடன் இனிமேல் சேர்ந்து பணியாற்றவே கூடாது என்று முடிவெடுத்தேன் என கூறினார் என ஸ்ரீகாந்த் பதிவு செய்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படித்தான் முன்னணி நடிகர்களாக இருந்த நடிகர் பிரசாந்த், நடிகர் அப்பாஸ், நடிகர் கரண் ஆகியோர் இயக்குனர்களிடம் நேரடியாக கதை கேட்காமல் தங்களுடைய மேனேஜர்கள் மூலம் கதை கேட்டு வந்தனர். தற்போது ஆள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் போய்விட்டார்கள்.

ஒரு நடிகரை சினிமா துறையில் நிலை நிறுத்துவது அவருடைய படங்கள் தான். அந்த படங்களுக்கு மிக முக்கியமான அச்சாணியாக இருப்பது கதை.

அப்படி முக்கியமான கதையை நாங்கள் கேட்க முடியாது.. மேனேஜர்களை வைத்து தான் கேட்போம் என்றால் அவர்கள் தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.

பல முன்னணி நடிகர்களின் சோலியை முடித்த பெருமை குறிப்பிட்ட நடிகர்களின் மேனேஜர்களுக்கு உண்டு. கதை பிடித்திருக்கிறது.. பிடிக்கவில்லை.. சிறிய இயக்குனரோ.. பெரிய இயக்குனரோ.. கதை சொல்லும் பொழுது குறிப்பிட்டு நடிகர் அந்த இடத்தில் இருந்தே ஆக வேண்டும். இல்லை என்றால் அவருக்கு சினிமாவில் எதிர்காலம் கிடையாது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து பேசிய நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி எனக்கு அந்த காரணத்தை சொன்ன பிறகு யார் என்னிடம் கதை சொல்ல வந்தாலும் நானே நேரடியாக உட்கார்ந்து கதையைக் கேட்க ஆரம்பித்து இருக்கிறேன் என பேசி இருக்கிறார் ஸ்ரீகாந்த்.

இதை கேட்ட ரசிகர்கள் சூரிய நமஸ்காரமா? நீங்கள் எல்லாம் ஒரு காலத்தில் அஜித் விஜய் ரேஞ்சுக்கு பிரபலமான நடிகராக வலம் வந்தீர்கள். அப்போதே இந்த விஷயத்தை செய்திருந்தால் என்று நீங்கள் முன்னணி நடிகராக இருந்திருக்கலாம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்தின் இந்த நடவடிக்கை மற்றும் பேச்சு குறித்து உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யலாம். 

Summary in English : Actor Srikanth’s journey in the film industry serves as a poignant reminder of how crucial the right management decisions are for an actor’s career. Despite his undeniable talent and charisma, Srikanth faced a significant downturn in his cinema market, a situation he attributes to the misguided choices made by his managers.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version