பிரபல நடிகை சிவாதா நாயர் நெடுஞ்சாலை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இது வழக்கமான பேட்டிகள் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான பேட்டி.
எஸ் எஸ் மியூசிக் என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு இவர் கொடுத்திருந்த இந்த பேட்டி தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த பேட்டியில் சிவாதா-வின் இரண்டு கைகளிலும் இரண்டு வைப்ரேட்டர்களுடன் கூடிய லைட்டுகள் கட்டப்பட்டிருக்கும். கேள்வி எழுப்பும் பொழுது சிவாதா நாயர் உண்மை சொன்னால் அது பச்சை நிறத்தில் ஒளிரும்… பொய் சொன்னால் சிகப்பு நிறத்தில் ஒளிரும்.. இது விளையாட்டு தான் உண்மையான மெஷின் கிடையாது.
என்றாலும், இந்த பேட்டி மிகவும் சுவாரசியமாக இருந்தது என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், பேட்டியின் போது கருடன் படத்தின் வெற்றிக்கு நீங்கள்தான் காரணம்.. என்று எல்லோரிடமும் நீங்கள் சொல்கிறீர்களாமே..? அது உண்மையா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதுக்கு பதில் அளித்த சிவாதா நாயர்.. இல்லை நான் போய் யாரிடமாவது இப்படி சொன்னால் அவர்கள் நம்புவார்களா..? நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை.. என்று கதறினார்.
அப்போது சிவாதா நாயர் பொய் சொல்வதாக சிகப்பு நிற விளக்கு ஒளிர்ந்தது. இதை பார்த்து பயந்து போன சிவாதா நாயர்.. கண்டிப்பாக இல்லை அந்த படத்தில் எவ்வளவோ பேர் பணியாற்றி இருக்கிறார்கள்.. அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நான் தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று நான் சொல்வேனா.. கண்டிப்பாக நான் அதனை சொல்லவில்லை என்று கூறினார். மீண்டும் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது.
அப்போது பேசிய சிவாதா நாயர் இந்த வைப்ரேட்டரில் வைப்ரேஷனை குறைத்து வையுங்கள்.. என்னுடைய கை வலிக்கிறது.. நான் அப்படி சொல்லவில்லை என்று அடுத்த கேள்விக்கு நகர்ந்து சென்றார்.. வேடிக்கையான இந்த பேட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது .
Summary in English : Actress Sshivada Nair recently opened up about her role in the success of the film “Karudan,” and let me tell you, she’s not one to take all the credit! In a candid interview, she emphasized that while she’s proud of her performance, it takes a whole team to make a movie shine.