நான் இந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்று நினைத்தேன்.. ஆனால்.. நடிகை சுகன்யா ஓப்பன் டாக்..!

உலகநாயகன் கமலஹாசன் உடன் நடிக்க முடியாது என்ற சமயத்தில் நான் இரண்டு படங்களில் நடித்தேன் என்று அண்மை பேட்டியில் நடிகை சுகன்யா குறிப்பிட்டு பேசியது. 

புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான நடிகை சுகன்யா தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் பலரை கவர்ந்தவர்.

அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் பல நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து இருக்கக்கூடிய இவர் பல வெற்றி படங்களை தந்து வெற்றி நடிகை ஆக உலா வந்தவர். 

நான் இந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்று நினைத்தேன்..

இன்றும் இவர் நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், மகாநதி போன்ற படங்கள் இவரது நடிப்பை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்ட கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். 

மிகச்சிறந்த பரதநாட்டக் கலைஞரான இவர் பின்னணி பாடல்களையும் பாடுவதில் வல்லவர் என்று சொன்னால் அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இதைத் தொடர்ந்து சாய் வித் சித்ரா என்ற ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்த போது அவர் பேசிய விஷயம் பலரையும் கவர்ந்துள்ளது. 

இதற்கு காரணம் இந்த பேட்டியில் இவரிடம் தொகுப்பாளர் கமலஹாசனோடு நடிக்க மாட்டேன் என்று நினைத்தீர்களா? என்ற கேள்வியை எழுப்பிய போது அந்த சமயத்தில் ஸ்டார் நைட்டுகாக இவர் சிங்கப்பூர் செல்ல வேண்டி இருந்தது. அதற்கான ரிகாசலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இருந்ததாக சொல்லி இருக்கிறார். 

ஆனால்.. நடிகை சுகன்யா ஓப்பன் டாக்..

மேலும் அந்த சமயத்தில் கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்று வந்ததால் கமலஹாசன் படத்தில் எப்படி நடிக்க முடியும் என்று தான் யோசித்ததாகவும் தன்னால் நடிக்க முடியாது என்று ஒரு கட்டத்தில் விட்டு விட்டதாகவும் பேசினார். 

ஆனால் அதிர்ஷ்டவசமாக மகாநதி திரைப்படத்திலும் இந்தியன் படத்திலும் கமலஹாசனோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது என்னால் இன்று வரை மறக்க முடியாது என்று பாங்காக பேசியதை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். 

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English: Actress Suganya recently opened up about her experiences working with the legendary Ulaganayagan Kamal Hassan in films like “Mahanadi” and “Indian.” It’s always a treat to hear actors share their behind-the-scenes stories, and Suganya didn’t hold back! She reminisced about how Kamal’s dedication to his craft is truly inspiring.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version