உன்னை யார் பேச சொன்னா..? DSP போட்ட போன்.. அதிர்ந்த சூர்யா குடும்பம்.. மும்பை பறக்கும் சிவக்குமார்..!

சூர்யாவின் திரையுலக வரலாற்றில் படுமோசமான விமர்சனத்தை எதிர்கொண்டு இருக்கிறது கங்குவா திரைப்படம்.

இது நடிகர் சூர்யாவின் சினிமா எதிர்காலத்தின் சினிமா வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே ஒரு உலுக்கு உலுக்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இது தனிப்பட்ட முறையில் நடிகர் சூர்யாவின் மீது பல்வேறு மாற்றத்தை திணித்து இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

நடிகர் சூர்யா கதை தேர்வில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினரால் அறிவுறுத்தப்பட்டு வந்தார் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.

குறிப்பாக நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் மற்றும் அவருடைய தம்பி கார்த்திக் இருவருமே கதை தேர்வில் முழுக்க முழுக்க சூர்யா மட்டுமே ஈடுபட வேண்டும் என்று விரும்பியதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகுவது வழக்கம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா என்னுடைய படங்களுக்கு நான்தான் கதையை தேர்வு செய்வேன். ஆனால், என்னுடைய கணவர் சூர்யாவின் படங்களுக்கு இருவரும் சேர்ந்துதான் கதையை தேர்வு செய்வோம் என்று பேசி இருந்தார்.

இது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அது எப்படி..? உங்களுடைய படத்தின் கதையில் கணவர் சூர்யாவின் தலையில் இருக்கக்கூடாது என்று விரும்புகிறீர்கள்.. அதேநேரம் கணவர் சூர்யாவின் படம் என்றதும் இரண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுப்போம் என்று கூறுகிறீர்கள்..? என்று கேள்விகளை எழுப்பி வந்தனர் ரசிகர்கள்.

நடிகர் சூர்யாவின் அயன் படத்திற்கு பிறகு அவருடைய திரைப்பட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் படுமோசமான ட்ராக் ரெகார்ட் தான் இருக்கிறது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று இருக்க வேண்டிய ஒரு நடிகர் சூரியா.

இப்படி அதல பாதாளத்திற்கு செல்கிறார் என்று பலரும் நொந்து கொண்டிருக்கின்றனர். இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா வெளியேறியது சூர்யா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கண்டிப்பாக வணங்கான் திரைப்படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு அவர் அந்த படத்தை விட்டு வெளியேறியது அதிர்ச்சியை கொடுத்தது,

இந்நிலையில் தற்போது கங்குவா திரைப்படம் அடைந்திருக்கக்கூடிய தோல்வியால் நடிகர் சூர்யா மிகவும் நொந்து போய் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க.. எப்போதும் இல்லாத திருநாளாக நடிகை ஜோதிகா இந்த திரைப்படத்தில் விவகாரத்தில் மூக்கை நுழைத்து கருத்தை கூறியதன் மூலம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

படம் பார்த்தேன்.. படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு போனால் பிரச்சினையே கிடையாது. ஆனால், அவர் எதிர்மறையான கருத்துக்களுக்கு பதில் அளிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் படத்தில் இசை இறைச்சலாக இருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.. தயாரிப்பாளருக்கு போன் செய்த என்னுடைய திரைப்பட வரலாற்றில் இப்படி ஒரு விமர்சனத்தை நான் எதிர்கொண்டதே கிடையாது.

இயக்குனர் என்ன கேட்டாரோ அவர் என்ன வேண்டும் என கூறினாரோ அதைத்தான் நான் செய்து கொடுத்தேன். இதுதான் இசையமைப்பாளரின் வேலை.. இப்படி ஒரு படத்தில் இசையமைப்பாளராக என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு இசை இரைச்சலாக இருந்தது என்று என் மீது குறை சொல்வதை எந்த நடிகரும் நடிகையும் செய்வது கிடையாது.

இது என்னுடைய இசை பயணத்தில் மிகப்பெரிய கரும்புள்ளி என தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மறுபக்கம் நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் சூர்யாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரிடம் நேரடியாக பேசுவதற்காக மும்பை செல்ல இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

காரணம் நடிகர் சூர்யா கதை தேர்வில் கவனம் செலுத்துவது கிடையாது. யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் அவர் கதை தேர்வு செய்யக்கூடாது. சூர்யா கதை தேர்வில் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது என்பதை அவருக்கு உரைக்கும் விதமாக எடுத்துக் கூறுவதற்கு சூர்யாவின் குடும்பத்தினரான சிவகுமார் மற்றும் அவருடைய தாய் இருவரும் மும்பை செல்ல இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும், இந்த Pan India திரைப்படம் என்ற மாய வலையில் சிக்கி இருக்கும் சூர்யாவை மீட்டு மீண்டும் முழு நேர தமிழ் சினிமா நடிகராக கொண்டுவர வேண்டும் இல்லை என்றால் சூர்யாவின் சினிமா எதிர்காலம் பாழாகிவிடும் அவர் தன்னுடைய மனைவி ஜோதிகாவால் தவறாக வழிநடத்தப்படுகிறார் நடிகை ஜோதிகா தேர்வு செய்யக்கூடிய கதைகள் மட்டும்தான் சூர்யா நடிக்கிறார் இதுதான் அவர் படங்கள் தொடர்ந்து ரசிகர் மத்தியில் வரவேற்பு பெறாமல் போவதற்கு காரணமாக இருக்கின்றன.

இதனை சூர்யாவிடம் எடுத்து சொல்லி அவருடைய போக்கை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் சூர்யா குடும்பத்தினர் ஈடுபட்டிருப்பதாகவும்.. மீண்டும் அவரை சென்னைக்கு குடிபெயர செய்யும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர் என்றும் கோடம்பாக்கம் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து நாட்களில் சூர்யா குடும்பத்தின் நகர்வுகளை பொறுத்து இந்த தகவல்கள் உண்மையா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Summary in English : Actor Suriya’s family has been buzzing with excitement lately, as they’re on a mission to bring him back to Chennai and help him get back in the groove of story selection! It seems like everyone is rallying around him, hoping to reignite that spark that made him one of the most beloved stars in the industry.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version