மின்னல் வேகத்தில் வளரும் தவெக..! கிருஸ்துமஸ் அன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்..!

நடிகர் விஜய் அரசியலில் ஜொலிப்பாரா..? இவருடைய அமைதியான குணத்திற்கும் அமைதியான பேச்சிருக்கும் அரசியல் செட்டாகுமா..? என்றெல்லாம் எகத்தாளமாக பேசிக் கொண்டிருந்த வாய்களை தன்னுடைய முதல் மாநாட்டில் சரவெடியாய் வெடித்த அனல் பறக்கும் பேச்சால் திணறடித்தார் நடிகர் விஜய்.

தமிழகத்தில் ஒரு புது அரசியல் களம்.. ஒரு புது அரசியல் தலைமை.. ஒரு புது நம்பிக்கை.. என தற்போதைய சூழலில் நடிகர் விஜய் பார்க்கப்படுகிறார்.

இவருடைய அரசியல் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை அடுத்தடுத்த அவருடைய அரசியல் நிகழ்வுகளை முடிவு செய்யும். ஆனால், தற்போது முழு நேர அரசியல்வாதியாக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.

குறிப்பாக நடிகர் விஜய் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டை நடத்திய பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியின் மீது பல்வேறு கட்சிகள் தங்களுடைய அதிருப்தியையும் அதே சமயம் வரவேற்பையும் பதிவு செய்து வருகின்றன.

இது ஒவ்வொரு தனிப்பட்ட கட்சியின் சித்தாந்தம் மற்றும் அரசியல் கொள்கையை குறித்து மாறுபடுகிறது. ஆனால், தேர்தல் நேரத்தில் சித்தாந்தம் அரசியல் கொள்கை என எதையும் எந்த கட்சியும் பின்பற்றாது என்பது உலகறிந்த உண்மை.

அப்போதைக்கு அரசியல் களம் எப்படி இருக்கிறது..? எந்த கட்சியுடன் சேர்ந்தால் எத்தனை சீட் கிடைக்கும்..? எந்த கட்சியுடன் சேர்ந்தால் நம்முடைய கட்சிக்கு லாபம்.? இந்த கணக்கு மட்டும்தான் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கையாளக்கூடிய யுக்தி.

அப்படி இருக்கும் சூழலில் தன்னுடைய முதல் மாநாட்டிலேயே கூட்டணிக்கான அச்சாரத்தை வீசி தற்போது இருக்கும் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சியின் வயிற்றில் புளியை கரைத்தார் நடிகர் விஜய்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது தன்னுடைய கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரக்கூடிய கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் ஏற்கனவே நடிகர் விஜய் மீது கிறிஸ்துவ மிஷனரி கைக்கூலி.. மிஷனரிகளின் பணத்தை வைத்து அரசியல் செய்கிறார் நடிகர் விஜய்.. நடிகர் விஜய்க்கு அரசியல் செய்ய பணம் கொடுப்பது கிறிஸ்தவ மிஷனரிகள் தான்.. என்று ஒரு பேச்சு இணைய பக்கங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் அன்று தன்னுடைய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டால் அதில் அவருக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட ஏதுவான சில காரணிகள் அமைந்துவிடும்.

இருந்தாலும் நடிகர் விஜய் பிறப்பால் ஒரு கிறிஸ்தவர் என்பதால் இந்த விஷயத்தை சமாளிப்பாரா.? இது தேவைதானா..? என்பதை நடிகர் விஜய் யோசித்துப் பார்க்க வேண்டும் என்ற பேச்சும் பொதுவெளியில் பார்க்க முடிகிறது.

அதே சமயம் நடிகர் விஜயின் தவெக கட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து பிரிந்து நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் சாரை சாரையாக படையெடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பை துறந்து தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் ஒரு மிகப்பெரிய சூறாவளியை கிளப்பி இருக்கிறார் என்பது நாளுக்கு நாள் நிறுபனமாகி கொண்டே வருகிறது என்று தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர்கள்.

Summary in English : The excitement surrounding actor Vijay’s upcoming film, Thalapathy 69, is reaching a fever pitch as rumors swirl that the highly anticipated first look poster will be unveiled on Christmas 2024. This news has fans buzzing with anticipation, and for good reason. Vijay’s films have consistently set the bar high, and Thalapathy 69 promises to be no exception. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version