கேவலமாக பேசிய டாக்டர் பாலாஜி சொன்ன அந்த வார்த்தை.. விக்னேஷ் தாய் சொன்ன பகீர் தகவல்..

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய தாய்க்கு தவறான சிகிச்சை அளித்த காரணத்தினால் மருத்துவரை கடுமையாக தாக்கி இருக்கிறார் விக்னேஷ் என்ற ஒரு இளைஞர்.

இது தான் இன்று காலை முதல் தமிழ்நாடு முழுதும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. மறுபக்கம் மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருப்பதில்லை.

அவர்களுடைய வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. இதனால் மருத்துவர்களுக்கு நோயாளிகளை கையாளுவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக இருந்து வருகிறது.

அதுவும் சமீப காலமாக மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இருவருக்கும் இடையே நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. ஏனென்றால், இன்று நடந்த இந்த பிரச்சனை மட்டும் கிடையாது. கடந்த சில வருடங்களாக நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் நடந்திருக்கின்றன.

இதற்கு மருத்துவர்கள் மீது இருக்கும் வேலைப்பளுவும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கைது செய்யப்பட்ட விக்னேஷ் அவர்களுடைய தாயார் பிரபல தனியார் சேனல் ஒன்று கொடுத்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பதிவு செய்தார்.

அதில் எனக்கு தவறான சிகிச்சை கொடுக்கப்பட்ட காரணத்தினால் தான் என்னுடைய நுரையீரல் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. என்னுடைய மகன் விக்னேஷ் தான் எனக்கு அனைத்தையும் செய்து கொடுக்கிறார்.

எனக்கு பெண் குழந்தை கிடையாது. ஒரு பெண்ணாக இருந்து எனக்கு எல்லாவற்றையும் என்னுடைய மகன்தான் செய்து கொண்டு இருந்தான். அந்த மருத்துவர் மீது நான் கடும் கோபத்தில் இருக்கிறேன்.

இப்போது விட்டால் கூட அவரை கன்னத்தில் பளார் பளார் என அறைவேன். எப்போதுமே என்னை மட்டும் அல்ல எந்த நோயாளியையும் அவர் முறையாக கவனிப்பது கிடையாது. ஒரு ஸ்கேன் எடுத்து வாருங்கள் என்று கூறுகிறார். நாம் அந்த பணம் செலுத்தி ஸ்கேன் எடுத்து அந்த ரிப்போர்ட்தை கொண்டு போய் மருத்துவரிடம் கொடுத்தால். நானா இந்த ஸ்கேன் எடுக்க சொல்லி எழுதிக் கொடுத்தேன்..? நியாபகம் இல்லையே.. சரி குடுங்க.. என்று அந்த ஸ்கேன் ரிப்போர்டை வாங்கி ஒரு ஓரமாக வைத்து விட்டு.. அந்த ஸ்கேன் ரிப்போர்ட் திறந்து கூட பார்க்காமல்.. அப்படியே வைத்து விட்டு அடுத்தடுத்து பேச ஆரம்பித்து விடுகிறார்.

பல நேரங்களில் ஆங்கிலத்தில் மோசமாக திட்டி இருக்கிறார். நாங்கள் ஏதாவது உடல் நலம் குறித்து கேள்வி எழுப்பினால்.. இங்கே நான் டாக்டரா..? இல்ல, நீ டாக்டரா..? என்று கூறுவார்.

இந்த வார்த்தையை திரும்பத் திரும்ப பதிவு செய்து கொண்டே இருந்தார் எங்கள் உடல் நலம் குறித்து ஏதாவது கேள்வி எழுப்பினாலே.. நான் டாக்டர் நீ டாக்டரா என்ற கேள்வி மட்டும் தான் அவர் பதிலாக இருக்கிறது.

ஒரு நோயாளியை நடத்துவது போல அவர் எங்களை நடத்தவில்லை. நாங்கள் ஏதோ தீண்டத்தகாதவர்கள் போல எங்களிடம் நடந்து கொண்டார். இந்த மருத்துவமனை.. அந்த மருத்துவமனை.. இந்த டாக்டர்.. அந்த டாக்டர்… என எங்களை அலைக்கழித்தார் என பேசி இருக்கிறார்.

இவருடைய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய தாய்க்கு தவறான சிகிச்சை கொடுத்த காரணத்தினால் மருத்துவரை தாக்கியிருக்கிறார் விக்னேஷ் என்று அவருடைய வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், விக்னேஷ் செய்தது முற்றிலும் ஒரு தவறான ஒரு விஷயம். இது மருத்துவர்கள் ஒரு அச்சம் கொள்ளக்கூடிய காரணியாக மாறி இருக்கிறது. பணியில் இருக்கும் மருத்துவர்கள் தங்களுடைய கடமை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் அதே சமயம் நோயாளிகளும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

மருத்துவர்களை தாக்குவது என்பது மிக மோசமான ஒரு விஷயம். ஒரு மகனாக அவர் செய்ததை புரிந்து கொள்ள முடிகிறது. என்றாலும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது தவறு.

விக்னேஷ் செய்த அந்த செயலை நியாயப்படுத்த முடியாது. அதே நேரம் அவருக்கு கடுமையான தண்டனைகள் எதையும் கொடுக்காமல் குறைந்தபட்ச தண்டனையை கொடுத்து அதே சமயம் மருத்துவர்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதமாக அரசு ஒரு நல்ல தீர்வை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக இணையவாசிகள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

Summary in English : In a surprising turn of events, the interview featuring the mother of Vignesh, who recently made headlines for assaulting a doctor in Chennai, has gone viral on the internet. People are buzzing about her emotional recounting of the incident and her perspective on what led to such an outburst.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version