சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தை தெரியுமா ? தெரிஞ்சா மிரண்டு போயிடுவீஎங்க..!

எப்போது பார்த்தாலும் பிஸியாக இருக்கும் நம்முடைய சென்னை சிட்டியின் டி நகருக்குள் சென்றாலே… என்னடா இவ்வளவு சரவணா ஸ்டோர்ஸ் இருக்கு..? இதில் எது உண்மையானது..? இதெல்லாம் யாருடையது..? என்ற குழப்பம் நமக்குள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த சரவணா ஸ்டோர்ஸ் எப்படி இந்த அளவுக்கு பேமஸ் ஆனது..? எப்படி இது உருவானது..? என்பது பற்றி பார்க்கலாம். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் சரவணன் நாடார்.

இவருடைய மகன்கள் தான் யோகரத்தினம், ராஜரத்தினம் மற்றும் செல்வரத்தினம். இதில் மூன்றாவது மகனான செல்வ ரத்தினம் தான் முதன் முதலில் சென்னைக்கு வந்தவர்.

தொடக்கத்தில் இவர் சின்னதாக ஒரு வியாபாரத்தை தொடங்கினார். வாடகை சைக்கிளில் சுக்கு காபி விற்பனை செய்பவராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் செல்வரத்தினம்.

நாட்கள் செல்ல செல்ல இவருடைய கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்க ஆரம்பித்தது. இவருடைய தொழில் வளர வளர இவருக்கு ஆட்கள் அதிகமாக தேவைப்பட்டது. அதிலும் நம்பகமான ஆட்கள் தேவை என்பதால் தன்னுடைய இரண்டு அண்ணங்களையும் சென்னைக்கு அழைத்தார் செல்வரத்தினம்.

என்ன ஒரு சகோதர பாசம் என்பதை பாருங்கள்..! தற்போது, ஒட்டுமொத்த நாடும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இவர்களுடைய வியாபாரம் கிடுகிடு என வளர்ந்து நிற்கிறது.

துணிக்கடை, நகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரிஸ் என அனைத்து துறைகளிலும் தங்களுடைய கால் தடத்தை பதித்து தற்போது திரைத்துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பலனிக்காமல் மரணமடைந்தார் செல்வரத்தினம் அவர்கள்.

தன்னுடைய உழைப்பால் உயர்ந்து மட்டுமில்லாமல் தன்னுடைய சகோதரர்கள் மற்றும் அவருடைய குடும்பம் மற்றும் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை கொடுத்த செல்வ ரத்தினம் அவர்களுக்கு நடந்த சோகம் இந்த தான் ஒரு சரவணா ஸ்டோர்ஸ் பல பெயர்களில் பிரிய காரணமாக அமைந்தது.

இந்த மூன்று சகோதரர்களின் மகன்கள் தான் தற்போது டி நகரில் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். யோகரத்தினத்தின் மகனும் ராஜரத்தினத்தின் மகனும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற கடையை நிர்வகித்துக் கொண்டு வருகிறார்கள்.

இவர்களுடன் சேராமல் செல்வரத்தினம் அவர்களுடைய மகன்.. அதாங்க.. நம்மளோய லெஜன்ட் சரவணன். இவர் தன்னுடைய மச்சான் கூட சேர்ந்து சரவணா செல்வரத்தினம் என்ற பெயரில் தன்னுடைய சாம்ராஜ்யத்தை உருவாக்க தொடங்கினார்.

இவரைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். கோலிவுட்டின் கனவு கன்னிகளான ஜோதிகா, சினேகா ஆகியோர் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்த காலமெல்லாம் போய்.. நானே இறங்குறேன்டா என்று ஒற்றை ஆளாக களத்தில் இறங்கி விளம்பரத்திற்கான ட்ரெண்டையே மாற்றியவர் நம்ம லெஜெண்ட் சரவணன்.

இந்த விளம்பரத்தில் நான் மட்டும் நடிக்க மாட்டேன்.. என்னோடு தற்போது இருக்கும் டாப் ஹீரோயின்களும் நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து கோடிகளை செலவழித்து அந்த நடிகைகளையும் தன்னுடைய விளம்பரத்தில் நடிக்க வைத்தார்.

இதைப் பார்த்துட்டு இவரை ஆரம்பத்தில் பலரும் கிண்டல் கேலி செய்தார்கள். ரசிகர்களின் வயிற்றெரிச்சல் இருக்கத்தா பின்னே. நாம் கனவில் ஆடும் கனவு கன்னிகளுடன் நிஜத்திலேயே ஆடிக்கொண்டிருக்கிறாரே இந்த மனுஷன் என்ற புகைச்சல் இருக்கத்தானே செய்யும்..

ஆனால், அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு தொடர்ந்து தன்னுடைய கடை விளம்பரத்தில் தானே தோன்றி புது ட்ரெண்டை உருவாக்கி சாதித்துக் காட்டினார் லெஜெண்ட் சரவணன்.

தொடர்ந்து விளம்பரங்களில் நடிப்பீங்களா..? என்ற கேள்வி எழுப்பிய போது விளம்பரங்கள் மட்டுமல்ல படத்தில் கூட நான் ஹீரோவாக நடிப்பேன் என்று கூறினார். அன்று, அப்போது அவர் விளையாட்டாக கூறிய விஷயத்தை செய்து காட்டினார்.

தி லெஜெண்ட் என்ற படத்தில் பாலிவுட் நடிகையை ஹீரோயினாக போட்டு நடித்து அசத்தினார் லெஜெண்ட் சரவணன். இவருடைய வியாபாரம் பெருகிக்கொண்டு செல்வதால் தங்களுடைய அடுத்தடுத்த கிளைகளை மெட்ரோ சிட்டிகளான டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா என விரிவாக்கம் செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் தங்களுடைய சாம்ராஜ்யத்தின் கிளைகளை பரப்ப தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள். இப்படி உலகம் முழுதும் தங்களுடைய கிளைகளை பரப்பிக் கொண்டிருந்தாலும் தங்களுடைய சொந்த ஊரான திருநெல்வேலியில் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் புதிய கடை ஒன்றை திறந்தார் லெஜெண்ட் சரவணன்.

பார்ப்பதற்கு இளைஞர் போல காட்சியளித்தாலும் இவருக்கு திருமணமான இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. தன்னுடைய தொழிலையும் கவனித்துக்கொண்டு.. அதே சமயம் தன்னுடைய குடும்பத்துக்கும் சரியான நேரத்தை ஒதுக்கி ஒரு குடும்ப தலைவராகவும் தொழில் அதிபராகவும் தமிழ்நாட்டை மிரட்டிக் கொண்டிருக்கிறார் லெஜெண்ட் சரவணன்.

தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் ஒரு படத்தின் கதை தான் அந்த படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் தன்னுடைய இயக்குனர்களிடம் கூறி கதை வடிவமைப்பு பணியில் முதலில் ஈடுபடுமாறு அவர்களுக்கு நிறைய நேரம் கொடுத்து கதை மற்றும் திரைக்கதை அமைக்க கூறியிருக்கிறார் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

இவருடைய இந்த இமாலய வளர்ச்சி பற்றி உங்களுடைய கருத்து என்ன..? என்பதை இங்கே பதிவு செய்யலாம்.

Summary in English : The Legend Saravanan has quite an intriguing history that many might not be aware of! It all started back in the early days when a small group of passionate individuals came together with a dream to create something extraordinary. They wanted to blend tradition with modernity, and thus, The Legend Saravanan was born.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version