“கங்குவா” படம் எப்படி இருக்கு..? படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

Kanguva Review : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் கே இ ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவார்.

பாகுபலி, ஆர் ஆர் ஆர், வரிசையில் பிரம்மாண்டமான பேன் இந்தியா திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி திரையரங்குகளில் வரக்கூடிய 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாலிவுட் பிரபலங்கள் பாபி தியோல் மற்றும் திசா பதானி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்கள்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், போஜ்புரி, கன்னடம், என மொத்தம் 35 மொழி வெளியாகிறது கங்குவா திரைப்படம். மேலும், உலகம் முழுதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட துறைகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

படம் வெளியாகி நிச்சயம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

எங்களுடைய இலக்கு 2000 கோடி என்றும் ஆயிரம் கோடி என்ற இலக்கை எளிமையாக கங்குவா திரைப்படம் எட்டி விடும் என்றும் கங்குவா படத்தில் இரண்டாம் பாகம் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிருக்கும் என பேசி இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.

அதேசமயம் நடிகர் சூர்யா ஒரு மேடை நிகழ்ச்சியில் கங்குவா திரைப்படத்தை அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள் என்று பேசியிருக்கிறார்.

இதெல்லாம் படத்துக்கு ஓவர் ஹைப் என்று எடுத்துக் கொள்வதா..? அல்லது, படத்தின் மீது இவர்கள் வைத்திருக்கும் அசுர நம்பிக்கை என்று எடுத்துக்கொள்வதா..? என்பது படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் உலகம் முழுதும் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக படக்குழு ஈடுபட்டு இருக்கிறது.

கங்குவா திரைப்படத்தின் பிரீ புக்கிங் தொடங்கியுள்ள நிலையில் வசூல் வேட்டையை ஏற்கனவே தொடங்கிவிட்டது என கூறலாம்.

இந்த படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. கங்குவா படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் என்றும் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் படத்தை மனதார பாராட்டி இருக்கின்றனர்.

மேலும் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை பார்த்ததில்லை. தமிழ் சினிமாவில் இப்படியும் படம் எடுக்க முடியுமா..? என்பதை பார்த்து வியந்திருக்கிறோம் எனவும் சென்சார் குழுவினர் தெரிவித்ததாக பட குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும்ம கங்குவா படம் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது எனவும் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இந்த படம் நிச்சயம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் எனவும் சென்சார் குழு படத்தை புகழ்ந்து இருக்கிறது என்று தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : The recent review of the Kanguva movie by the Censor Board has taken social media by storm, igniting discussions and debates across various platforms. As audiences eagerly await its release, the buzz surrounding the film is palpable. The Censor Board’s feedback has highlighted both commendable aspects and areas of concern, prompting fans and critics alike to weigh in on what this means for the film’s future. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version