காதல் முறிவுக்கு இது தான் காரணம்.. போட்டு உடைத்த பிரியா பவானி சங்கர்..!

Priya Bhavani Shankar recently shared some real talk about relationships that definitely struck a chord with many. She boldly stated that a breakup is often better than staying stuck in a toxic relationship. And honestly, who can argue with that?

நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார் இன்னும் சிலர் ராஜவேலுவை பிரியா பவானி சங்கர் திருமணம் செய்து கொண்டார்.

அதை வெளியே தெரிவித்தால் அவருக்கு பட வாய்ப்பு போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக வெளியே சொல்லாமல் மறைக்கிறார். இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். லிவின் ரிலேஷன்ஷிப்பில் தங்களுடைய வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், இது குறித்து பிரியா பவானி சங்கர் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், காதல் முடிறிவு குறித்தும்.. எப்படியான நேரங்களில் காதலை முறித்துக் கொள்ள வேண்டும்.. என்பது பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசியிருக்கிறார்.

இந்த பேட்டியில் பேசிய அவர் கூறியதாவது, எனக்கு முதல் மற்றும் கடைசி ஆண் நண்பர் யார் என்றால் அது ராஜவேலுதான். ஆனால், ராஜவேலுவிற்கு நான் முதல் காதலி கிடையாது. அவர் பள்ளி பருவத்தில் கல்லூரி பருவத்தில் வேறு சில பெண்களை காதலித்திருக்கிறார். டேட் செய்து இருக்கிறார்.

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு வேறு யாரையும் காதலிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, அவ்வளவுதான். ராஜவேலுவை சந்தித்ததில் இருந்து தற்போது வரை அவர் தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், ஒரு விஷயத்தை எனது தெளிவாக சொல்ல முடியும். நான் உண்மையாக காதலிக்கிறேன்.. உன்னை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க மாட்டேன்.. என்று நம்முடைய நேர்மையை நிரூபிப்பதற்காக மோசமான ஒரு நபருடன் தொடர்ந்து பயணிப்பது தொடர்ந்து அவரை காதலிப்பது என்பது தவறான விஷயம்.

ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் எனும் பொழுது இருவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும்.. சந்தோஷத்தை பரிமாறி கொள்ள வேண்டும்.. அதற்கு மாறாக நீ இதை செய்யக்கூடாது.. நீ அதை செய்யக்கூடாது.. அதை ஏன் செய்தாய்.. இதை ஏன் செய்தாய்..? என கேள்வி கேட்டுக் கொண்டே ஒரு விஷத்தனமான உறவாக அது மாறும் பொழுது… கண்டிப்பாக அந்த உறவிலிருந்து வெளியேற வேண்டும், ஓடிவிட வேண்டும்.

ஒருவர் தன்னை கஷ்டப்படுத்தும் போது.. மனம் நொந்து கொண்டு.. நான் உன்னை தான் நிஜமாக காதலிக்கிறேன்.. என்னுடைய காதல் எவ்வளவு புனிதமானது தெரியுமா..? என்பதெல்லாம் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

ஒருவர் உங்களை மதிக்கவில்லை.. உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கிறார் என்றால்.. அது காதலே கிடையாது. இது தான் காதல் முறிவுக்கு காரணம்.. என ஓப்பனாக சொல்லி விட்டு அந்த காதலில் இருந்து வெளியேறி ஓடிவிட வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் நன்றாக செல்லும் காதலில் பிரிவு ஏற்படுது கூட எளிதானது. ஆனால், இப்படி விஷத்தனமான உறவு முறையில் இருக்கும் காதலை பிரிவது என்பது கடினமான விஷயம்.

ஆனாலும், எப்படியாவது முயற்சி செய்து தங்களுக்கு ஒவ்வாத ஒரு நபருடன் தொடர்ந்து பயணிப்பது தவிர்த்து விட்டு பிரேக் செய்து விடுவது சிறந்தது என பேசி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவருடைய இந்த கருத்து குறித்து உங்களுடைய பார்வை என்ன என்பதை பதிவு செய்யலாம்.  

Summary in English : Priya Bhavani Shankar recently opened up about a topic that resonates with many of us: the importance of recognizing when a relationship has turned toxic. She boldly stated that sometimes, a breakup is way better than sticking around in a situation that brings more pain than joy. It’s refreshing to hear someone in the spotlight advocate for prioritizing mental health and self-worth over societal expectations or fear of being alone.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version