மனைவி கோமாக்கு போயி 4 வருஷம் ஆச்சு.. கண்கலங்கி சத்யராஜ் சொன்ன வார்த்தை..!

பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களின் மனைவி கோமா நிலைக்கு சென்று இருக்கிறார் என்று சமீபத்தில் தான் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா இது குறித்த தகவலை வெளியிட்டிருந்தார்.

அவர் கூறியதாவது, சிங்கிள் பேரண்டாக இருக்கும் எல்லோருக்கும் பாராட்டுக்கள். கணவன் மனைவியாக இல்லாமல் கணவன் மட்டுமோ அல்லது மனைவி மட்டுமோ ஒரு குடும்பத்தை நடத்துவது என்பது எவ்வளவு பெரிய சவாலான விஷயம் என்பதை கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய தாய் கடந்த நான்கு ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறார்கள். என்னுடைய தந்தை தனி ஆளாக எங்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

என்னுடைய அம்மாவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக திடப்பொருள் உணவே கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் திரவ வடிவில் டியூப் மூலமாகத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் எங்களுடைய தாய் விரைவில் குணமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

என்னுடைய அம்மாவின் துணை இல்லாமல் என்னுடைய தந்தை எந்த அளவுக்கு கஷ்டப்படுவார் என்பதை எங்களால் பார்க்க முடிகிறது. ஒரு குடும்பத்தை தனியாக நடத்துவது என்பது எளிமையான விஷயம் அல்ல.

எங்களின் அம்மா கோமா நிலைக்கு சென்ற பிறகு எங்களுடைய குடும்பமே மனமுடைந்து விட்டோம். ஆனாலும் அவர் விரைவில் மருத்துவ சிகிச்சை மூலம் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

குறிப்பாக எங்களுடைய தந்தை அம்மாவை நினைத்து மனமுடைந்து இருக்கிறார். ஆனாலும், முறையான சிகிச்சைகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சீக்கிரம் சரியாகிடும் என்று மட்டும் தான் என் அம்மா குறித்து அதிகபட்சமாக அவர் சொல்லக்கூடிய வார்த்தையாக இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார் இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : It’s been a tough few years for actor Satyaraj and his family. His wife has been in a coma for the past four years, and the news has hit fans hard. Satyaraj, known for his incredible roles in Tamil cinema, has always had a special place in the hearts of movie lovers. But this personal struggle adds another layer to his story that many can empathize with. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version