அந்த மாதிரி காட்சிகளில் நடிச்சிட்டு… திருச்சி சாதனாவை ஓப்பனாக கேட்ட பிரபலம்.. மேடையில் நடந்த அவமானம்.!

முன்பெல்லாம் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வருவது என்பது பெரிய விஷயமாக இருந்தது. திரைப்படத்தில் ஏதாவது ஒரு சின்ன கதாபாத்திரமாகவே கிடைக்காதா? என்று பல வருடங்களாக காத்திருந்தவர்கள் சினிமாவில் அதிகம்.

அப்படியெல்லாம் இருந்து வந்த நிலையில் இப்பொழுது மிக எளிதாக பலரும் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நடிக்க துவங்கியிருக்கின்றனர். முக்கியமாக சமூக வலைதளங்கள் சினிமாவில் ஒருவரை பிரபலமாக்குவதற்கு அதிக உதவியாக இருக்கிறது.

அந்த மாதிரி காட்சிகளில் நடிச்சிட்டு

சமூக வலைத்தளம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள் என்றாலே சினிமாவில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து விடுகிறது. அதனை தொடர்ந்து மிக எளிதாகவே அவர்கள் சினிமாவில் நடித்து விடுகின்றனர். வி.ஜே சித்து மாதிரியான பலரும் இப்படி யூ ட்யூப் மூலமாக பிரபலம் அடைந்து பிறகு சினிமாவில் வந்து நடித்திருக்கின்றனர்.

அதே சமயம் சிலர் மிக எளிதாக சினிமாவில் வாய்ப்பை பெற்று வருவது சங்கடமான விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் கூட டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் எல்லாம் வந்தன.

ஓப்பனாக கேட்ட பிரபலம்

இந்த நிலையில் அறம் செய் என்கிற ஒரு திரைப்படத்தில் திருச்சி சாதனா என்கிற பெண் ஒருவர் நடித்திருக்கிறார். இவரும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரபலம் அடைந்தவர்தான் தொடர்ந்து இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்கள் பேசுவது, கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது போன்றவை மூலமாக திருச்சி சாதனா மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஆவார்.

அவருக்கு அறம் செய் என்கிற இந்த திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இதன் வெளியீட்டு விழாவில் பேசிய குணா ஜி என்கிற நபர் பேசும் பொழுது முன்பை விட இப்பொழுது நிறைய பெண்கள் அநாகரிகமான விஷயங்களை செய்து வருகின்றனர்.

மேடையில் நடந்த அவமானம்

திருச்சி சாதனா கூட குளிப்பதையெல்லாம் வீடியோவாக எடுத்து பதிவிட்டு இருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் இப்படி எல்லாம் வீடியோக்கள் போடுவதற்கு நடுவே சாதிகளை பற்றி பேசலாம்.

மக்கள் படும் கஷ்டங்களை பற்றி ஒரு வீடியோ பேசலாம் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் அதைக் கொண்டு செல்லலாம். ஆனால் ஏன் அதை எல்லாம் செய்ய மாட்டேங்கிறீர்கள் என்று வெளிப்படையாக கேட்டிருந்தார் குணாஜி இந்த நிலையில் இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டாக துவங்கியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version