கடைசி நொடியில் அரசு போட்ட உத்தரவு.. பரபரப்பில் தவெக மாநாடு.. என்ன இப்படி ஆகிப்போச்சு..!

தமிழக வெற்றிக்கழக மாநாடு இன்று நடைபெற இருக்கிறது. இதனால் தமிழக முழுதும் இருந்து மாநாட்டை நோக்கி வாகனங்கள் மூலம் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் படையெடுத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் சற்று முன்பு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்க இருக்கக்கூடிய சாலையில் உள்ள எந்த டாஸ்மாக் கடையையும் திறக்க கூடாது.

மேலும் தமிழக வெற்றிக்கழகம் மாநாடு நடக்க இருக்கக்கூடிய இடத்தில் இருந்து சுற்றி எங்கும் மது விநியோகக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பறந்து இருக்கிறது.

இந்த உத்தரவை மாநாடு அறிவிப்பு வெளியான அன்றே வெளியிட்டு இருக்கலாமே..? என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மதுக்கடைகள் மூடப்பட்ட காரணத்தினால் அதனை சுற்றி இருந்த உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

போக்குவரத்து நெரிசல் காரணமாக வி.சாலையில் இருக்கக்கூடிய பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன.

இதனால் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் திணறுகிறார்கள் தவெக தொண்டர்கள்.

மேலும் ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் தற்காலிக கடைகளில் தின்பண்டங்களின் விலை இரண்டு மடங்கு வைத்து விற்பனை செய்யப்படுகிறது என்றும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதனால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டை சுற்றி பெரும் பரபரப்பு நிலவுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version