உலகநாயகனை வைத்து எடுத்த படம் மொக்கை.. 32 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த இயக்குனர்!!

உலகநாயகன் கமலஹாசனை வைத்து ஆர்வி உதயகுமார் சிங்காரவேலன் என்ற படத்தை எடுத்ததை அடுத்து அந்த படம் ஒரு மொக்கை படமாக இருப்பதாக 32 ஆண்டுகள் கழித்து அண்மை பேட்டியில் மேடையில் பேசியிருப்பது. 

தமிழ் திரை உலகில் முடி சூடா மன்னனாக திகழும் உலக நாயகன் கமலஹாசனை பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரைப் போலவே பல படங்களை இயக்கி  முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த ஆர்.வி. உதயகுமார் பற்றியும் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். 

 தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பல்வேறு மொழி படங்களை ஓடிடி தளங்களில் பார்த்து வருவதால் தமிழ் படத்தின் தரம் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் அவர்களின் ரசனைக்கு ஏற்ப திரைப்படங்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உலகநாயகனை வைத்து எடுத்த படம் மொக்கை..

இந்நிலையில் பொது மேடை ஒன்றில் 32 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய இயக்கத்தில் உருவாகி வெளிவந்த சிங்காரவேலன் வெற்றி படம் குறித்து இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் அது ஒரு மொக்கை படம் என்று பேசியது பலரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்ததை கூறி பலரும் ஷாக்காக அவரது பேச்சு அமைந்தது. 

அந்த வகையில் அவர் பேசும் போது சில நேரங்களில் மொக்கை சினிமாக்கள் கூட வெற்றிகரமாக ஓடும் என்னுடைய சிங்கார வேலன் மொக்கை சினிமா தான் கமல் சாரை வைத்து எடுக்க வேண்டிய கதையை அல்ல. 

இந்த படத்தில் சிறு வயதில் காணாமல் போன பெண்ணை தேடிப்பிடித்து கல்யாணம் செய்ய வேண்டும். இது தான் ஓன்லைன் ஸ்டோரி இந்த ஓன்லைன் ஸ்டோரியை தயாரிப்பாளரிடம் சொல்ல அவர் ஓகே சொல்லிவிட்டார். 

மேலும் இந்த படத்தின் ரிலீஸ்க்கு முன் இந்த படத்தை பார்க்க வருபவர்கள் மூளையை கழட்டி வைத்து விட்டு வருமாறு கடிதம் எழுதினேன். ஏனென்றால் என்னை திட்டக்கூடாது என்ற எண்ணத்தில் தான். 

இதை அடுத்து இளையராஜா கூப்பிட்டு என்னையா எனக் கேட்டார் உடனே நான் ஆமாம் என்று சொன்னேன். இப்படித்தான் சின்ன கவுண்டர் படம் நல்லா ஓடிட்டு இருக்கு. அந்த படம் எடுத்தவன் தான் இந்த படத்தை எடுத்தான் கதையில்லாம ஒரு படத்தை எடுத்துட்டானே என்று என்ன திட்டக்கூடாது பாருங்க என்றேன். 

32 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த இயக்குனர்..

நீங்களே யோசித்துப் பாருங்கள் தேங்காயும், நெல்லும் விளையக்கூடிய பொள்ளாச்சி மண்ணிலிருந்து யாராவது கருவாடை எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி வருவார்களா? அப்படி என்ன மெட்ராஸில் கருவாடு இல்லாமல் போனது. 

இப்போது வரை இது நிமித்தமான கேள்வியை என்னிடம் யாரும் கேட்கவில்லை. அப்படி என்றால் ரசிகர்கள் அந்த காட்சியினை வசித்துப் பார்த்தார்கள் என்று தானே அர்த்தம். 

எனவே தான் ஒரு படம் வெற்றி அடைய நல்ல கதை மட்டும் போதாது. நேரம் நன்றாக இருக்க வேண்டும் இன்னும் சொல்லப்போனால் ரிலீஸ் தேதி படம் வெளியாகும் போது நல்ல படங்கள் வேறு ஏதாவது ஓடிக்கொண்டு இருக்கிறதா? தியேட்டர்கள் காலியாக இருக்கிறதா? என்பதை எல்லாம் சிந்தித்து பார்த்து செய்ய வேண்டும்.

இப்படி பேசியதோடு 32 ஆண்டுகள் கழித்த நிலையில் ஒரு படத்தை பற்றி அதுவும் தான் இயக்கிய படத்தை பற்றி இயக்குனர் கூறிய விஷயம் பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. 

இதை அடுத்த ரசிகர்கள் அனைவரும் அவர் பேசியதில் அர்த்தம் உள்ளது என்று சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் இது பற்றிய விஷயங்களை இணையத்தில் தெறிக்க விட்டு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். 

Summary in English: After 32 years, Udhaya Kumar is back in the spotlight, and he’s got some fascinating stories to share about his film “Singaravelan” and working alongside the legendary Ulaganayagan Kamal Haasan. It’s hard to believe it’s been over three decades since that iconic film hit the screens!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version