முன்னணி இயக்குனரின் ப்ரைவேட் பார்ட்டை பார்த்து மிரண்டு போன சாய் பல்லவி.. ஓப்பனாக கூறிய உமா பத்மநாபன்..!

பிரபல நடிகை உமா பத்மநாபன், நடிகை சாய் பல்லவி முன்னணி இயக்குனர் ஒருவரின் பிரைவேட் பார்ட்டை பார்த்து மிரண்டு போன தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய உமா பத்மநாபன் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதா பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான NGK என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகை உமா பத்மநாபன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்ட போது அவர் கூறியதாவது, இயக்குனர் செல்வராகவனிடம் ஒரு டேக்கை ஓகே வாங்குவது என்பது ஒரு யுகத்தை கடப்பது போல் ஆகும்.

ஒவ்வொரு காட்சியை பதிவு செய்த பின்பும் அவர் மட்டும் தனியாக அவருடைய மானிட்டரில் அமர்ந்து பார்ப்பார்.

ஒரு காட்சியில் எத்தனை பேர் நடித்திருக்கிறார்களோ..? அத்தனை தடவை அந்த காட்சியை பார்ப்பார்.. ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் ஒவ்வொரு நடிகரும் முழுமையாக சரியாக செய்திருக்கிறாரா என்று உறுதி செய்து கொள்வார்.

நான்கு பேர் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்கள் என்றால் நான்கு பேரில் யாராவது ஒருவர் சிறு தவறு செய்திருந்தாலும் அந்த காட்சிக்கு மறுபடியும் ரீ டேக் சொல்லிடுவார்.

அவர் ஒரு காட்சியை பார்த்து முடித்துவிட்டு டேக் ஓகே என்று சொல்லும் பொழுது எல்லோருக்கும் ஏதோ தீபாவளி போல ஒரு சந்தோஷம் இருக்கும். அப்பாடா இந்த காட்சியை முடித்தாகி விட்டது என்று.

இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அப்படி காட்சியை ஓகே செய்யும் பொழுது செல்வராகவன் மட்டும் தான் அவருடைய மானிட்டரை பார்ப்பார்.

அது அவருடைய பிரைவேட் ஏரியாவாக இருக்கும். இது செல்வராகவன் படத்தில் பணியாற்றிய அனைவருக்குமே தெரிந்திருக்கும். பொதுவாக சினிமா நடிகர்கள் எல்லோருக்குமே இது தெரியும்.

ஆனால் நடிகை சாய் பல்லவிக்கு இது தெரியவில்லை. ஒருமுறை காட்சி எப்படி வந்திருக்கிறது..? என்று செல்வராகவன் மானிட்டரை எட்டிப் பார்த்து விட்டார். அப்போது செல்வராகவன் கடுப்பாகிவிட்டார்.

இது என்னுடைய பிரைவேட் பார்ட்.. இங்கு யாரும் வரக்கூடாது.. முதல் தடவை என்பதால் விடுகிறேன்.. பேசாம போயிடுங்க என்று சாய்பல்லவியை அதட்டினார்.

மிரண்டு போன சாய்பல்லவி.. சாரி சாரி.. என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டார் என பேசி இருக்கிறார் நடிகை உமா பத்மநாபன்.

Summary in English : Actress Uma Padmanaban shared her shooting spot experience wirt Sai Pallavi and Selvaragavan in NGK movie.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version