சத்தியமா நெனச்சு  பாக்க முடியல..  முடியாதுன்னு ஜகா வாங்கிய சிவகார்த்திகேயன்!!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக நடிகர் சிவகார்த்திகேயன் பணியாற்றி இருக்கிறார். இதனை அடுத்து இயக்குனராக செயல்படுவது மிகவும் கஷ்டம் என்னால் சத்தியமாக முடியாது என்ற விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். 

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த நடிகர்களில் மிக முக்கியமான இடத்தை தற்போது தக்க வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் குறித்து அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

வீட்டில் இருக்கும் சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கிறார்கள். அந்த வகையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள்.

சத்தியமா நெனச்சு  பாக்க முடியல.. 

இந்நிலையில் தீபாவளியன்று இவரது திரைப்படமான அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு மிகப்பெரிய அளவு பாக்ஸ் ஆபிஸ் கிட்டை தந்துள்ளது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். 

பயோபிக் திரைப்படமான இந்த திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கக் கூடிய வகையில் கதை இருந்ததோடு இந்த படத்தில் நடித்த அனைவருமே அவர்களது பணியை சிறப்பாக செய்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. 

அதிலும் குறிப்பாக சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயனின் நடிப்பு பலரையும் இம்ப்ரஸ் செய்யக் கூடிய வகையில் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரக்கூடிய சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். 

அது அவர் பேசும் போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதை பற்றி கூறியதோடு சினிமாவில் நடிப்பதை விட இயக்கம் மிகவும் கஷ்டமான விஷயம் என்பதை ஓபன் ஆக தெரிவித்திருக்கிறார். 

முடியாதுன்னு ஜகா வாங்கிய சிவகார்த்திகேயன்..

மேலும் இயக்குனராக பொறுமை கட்டாயம் தேவை. அது போல ஸ்கிரிப்ட் ரைட்டிங் மிகவும் கடினமான விஷயம் என சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். அத்தோடு தன்னிடம் நிறைய ஐடியாக்கள் உள்ளதாகவும் இயக்குனர்கள் தன்னை அணுகினால் அதை கூற தயாராக இருப்பதாகவும் அந்த கதைக்களத்தை அவர்களில் உருவாக்கிக் கொள்ளலாம் என்ற விஷயத்தை தெரிவித்தார். 

இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் இணைந்து நடிக்க இருக்கிறார் என்ற படத்தின் ஷூட்டிங் நிறைவு கட்டத்தை எடுத்து உள்ளதால் அடுத்ததாக சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்நிலையில் அவர் இயக்குனராக மாறுவது எவ்வளவு சிரமம் என்பதை வெளிப்படையாக தெரிவித்ததை அடுத்து அந்த விஷயம் இணையம் எங்கும் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

Summary in English: Sivakarthikeyan recently opened up about the pivotal role directors play in the film industry, and let me tell you, his insights are spot on! He emphasized that a director is not just someone who shouts “action” and “cut” on set; they’re the creative backbone of a film. They shape the story, guide the actors, and bring the script to life in ways that resonate with audiences.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version