“நெத்தியில பட்டை.. கழுத்துல ஜெபமாலை..” இதை கூட விடுங்க.. இந்த கூத்தை பாருங்க.. வணங்கான் Sneak Peak..!

நடிகர் அருண் விஜய் இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த காட்சியில் நடிகர் அருண் விஜய் 3 இளைஞர்களை கடுமையாக தாக்கி இருக்கிறார். அதுவும் காவல் நிலையத்தில் வைத்தே தாக்கியிருக்கிறார்.

இதை பார்த்த காவலர்கள் அவரை பிடித்து கம்பிக்குள் அடைகிறார்கள். அதன் பிறகு அந்த காவல் நிலையத்தின் மேல் அதிகாரி வருகிறார். அவரிடம் நடந்ததை விவரிக்கிறார்கள் அங்கிருந்து காவலர்கள்.

அதன் பிறகு அருண் விஜயிடம் சென்று உன்னுடைய பெயர் என்ன..? என்று உயர் அதிகாரி கேட்கிறார். ஆனால், அருண் விஜய் பதிலே சொல்லாமல் அமர்ந்திருக்கிறார். அதன் பிறகு கிறிஸ்துவ பாதிரியார் தோற்றத்தில் வரக்கூடிய நபர் காவல் துறை உயர் அதிகாரியிடம் கடந்துவற்றை கூற முயற்சி செய்கிறார்.

அவர் நெத்தியில் சிகப்பு பட்டையை போட்டுக் கொண்டு கழுத்தில் ஜெபமாலை அணிந்து கொண்டு இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் பாலாவின் பாதிரியார் போல் தெரிகிறது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் உயர் அதிகாரி அருண் விஜயிடம் பெயர் என்ன என்று கேட்டபோதே வாய் திறக்காமல் இருப்பார் அருண் விஜய்.

அவருக்காக பரிந்து பேசி அழைத்துச் செல்ல வந்த பாதிரியாரிடம் அருண் விஜய் அனைத்து தகவலையும் கொடுத்து விட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையை நாங்கள் பதிவு செய்து விட்டோம் என்றும் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்றும் காவல்துறை அதிகாரி கிண்டலாக பேசிவிட்டு தன்னுடைய குழந்தையுடன் தொலைபேசியில் கொஞ்சியபடி காவல் நிலையத்தில் இருந்து கிளம்பி விடுவார்.

இப்படியாக இந்த காட்சியை நிறைவு பெறுகிறது. இந்த வீடியோ வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எதிர வைத்திருக்கிறது. அருண் விஜய் வாயே திறக்காத போது அவர் எல்லா வாக்குமூலத்தையும் கொடுத்து விட்டார் FIR போட்டாச்சு என்று காவல் துறை அதிகாரி எஸ்கேப் ஆகிறார். இதற்கு என்ன காரணம்..? அடுத்து என்ன நடக்கும்..? என்று எதிர்பார்ப்பை இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்படுத்தியிருக்கிறது.

Summary in English : Director Bala’s latest movie, *Vanangaan*, is already making waves, and it’s all thanks to the sneak peek video that dropped recently! Fans are buzzing with excitement as they catch a glimpse of what’s in store.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version