விடுதலை 2 – விஜய் தாக்கப்பட்டாரா..? – பூதாகரமாக வெடித்த விவகாரம்..!

வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜயை தாக்கி பேசி இருக்கக்கூடிய விஷயங்களை படத்தில் செய்ததை அடுத்து அது தற்போது வேகமாக இணையங்களில் பரவி வருகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார், கௌதம் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் விடுதலை  என்ற படத்தின் முதல் பாகத்தை அடுத்து தற்போது இரண்டாவது பகுதி உருவாக்கி வருகிறது. 

இதை அடுத்து நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி அதில் வரும் ஒரு வசனத்தை வைத்து புதிய பூகம்பங்கள் கிளம்பியுள்ளது. 

விடுதலை 2 – விஜய் தாக்கப்பட்டாரா..

இந்திய அளவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கியவர். 

இவரது படைப்புகள் அனைத்துமே சமுதாயத்தில் இருக்கும் முக்கிய பொருட்களை மையமாக கொண்டு பேசப்படும் அது மட்டுமல்லாமல் முக்கிய விவாதங்களை ஏற்படுத்தக் கூடிய அளவு இவரின் படத்தின் தாக்கம் இருக்கும்.

அந்த வகையில் இவர் எடுத்த விடுதலை படமும் மக்களின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் காமெடியனாக நடித்த சூரியை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை எடுத்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் இந்த படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் பாலமுருகன் எழுதிய சோழர்கள் தொட்டி நாவிலிருந்து சில காட்சிகளை உருவி விட்டதாக சர்ச்சைகள் எழுந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

அது ஒரு புறம் இருக்க தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தை வெற்றிமாறன் உருவாக்கி இருக்க இதில் விஜய் சேதுபதி வாழ்க்கையில் என்ன நடந்தது.. அவர் ஏன் ஆயுத வழியை தேர்ந்தெடுத்தார் போன்ற விஷயங்களை வைத்து படத்தின் கதை நகர்ந்து உள்ளது. 

படத்தின் முதல் பாகத்தில் பெற்ற விமர்சனங்களை இரண்டாவது பாகத்தில் பெற்று விடக்கூடாது என்பதில் கவனமாக இயக்குனர் இருந்திருக்கிறார்.

அத்தோடு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்க படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

இந்தப் படம் அடுத்த 20 தேதி வெளிவரக்கூடிய சூழ்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் வெற்றிமாறன் இளையராஜா உள்ளிட்ட படகுழுவை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். 

அந்தப் படத்தில் தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்ற வசனம் வருகிறது. 

பூதாகரமாக வெடித்த விவகாரம்..

இந்த வசனத்தை கவனித்த ரசிகர்கள் இந்த வசனத்தின் மூலம் சமீபத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய்யை தாக்கக்கூடிய விதத்தில் இருந்த வசனம் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். 

அது மட்டுமல்லாமல் அவர் தான் மாநாட்டில் கடவுள் மறுப்பு எங்கள் கொள்கை இல்லை ஆனாலும் பெரியாரைப் பின்பற்றுவோம் என்று சொல்லிய விஷயத்தை நினைவுப்படுத்தி இருக்கிறார்கள். 

இந்த மாநாட்டில் தான் அம்பேத்கர் எழுதிய புத்தகமும், மறுபக்கம் சனாதனத்தை வலியுறுத்தும் பகவத் கீதையும் இருந்தது இதனால் விஜயின் தத்துவம் என்ன என்று பலரும் குழம்பி தவித்தார்கள். 

அதனை சுட்டிக்காட்டக் கூடிய வகையில் தான் விஜயின் அரசியல் தத்துவம் சரியில்லை என்று மறை முகமாக வெற்றிமாறன் சாடி இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள். 

வேறு சிலரோ விஜய்யின் கடைசி படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு தனக்கு கிடைக்காத வார்த்தையில் தான் வெற்றிமாறன் இப்படிப்பட்ட வசனத்தை வைத்திருக்கிறார் என்று விஜயின் ரசிகர்கள் அவரையும் கலாய்த்து இருக்கிறார்கள். 

Summary in English: In the latest buzz surrounding Tamil cinema, the trailer for “Viduthalai 2” has dropped, and it’s got everyone talking! One of the standout moments features director Vetrimaaran seemingly taking a jab at superstar Vijay. Fans are speculating about what this could mean for both their careers and the industry as a whole.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version