அரசியல் கட்சிகளை வாய் பிளக்க வைத்த விஜய்.. இந்த சாதூர்யம் இல்லாம போச்சே?..

நடிகர் விஜய் கட்சி துவங்கியது முதலே மக்களுக்கு விஜய் மீது ஆர்வம் என்பது அதிகரித்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். இந்த வருடம் தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய் இன்னும் சில நாட்களில் கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் கட்சி கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பது ஒரு பக்கம் அனைவருக்கும் எதிர்பார்ப்பை தூண்டும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சினிமா மார்க்கெட்டை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு இவ்வளவு தீவிரமாக வருகிறார் என்றால் கண்டிப்பாக மக்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்கிற நம்பிக்கையும் ஒரு பக்கம் இருந்து வருகிறது.

வாய் பிளக்க வைத்த விஜய்

இந்த நிலையில் விக்கிரவாண்டியில் விஜய்யின் முதல் கட்சி மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இந்த மாநாட்டில்தான் இவரது கட்சியின் கொள்கைகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்காக நிறைய செலவு செய்து பெரிதாக செய்து வருகிறார் விஜய்.

ஏனெனில் இந்த மாநாட்டை சரியாக நடத்துவதன் மூலம் தன்னை ஒரு அரசியல் பிரமுகராக விஜய் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இது விஜய்க்கு மிக முக்கியமான மாநாடு ஆகும்.

இந்த நிலையில் அரசியல் பிரமுகர்களே வாய்ப்பிழக்கும் வகையில் மிகப் பிரமாண்டமாக இந்த மாநாடு உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த சாதூர்யம் இல்லாம போச்சே

மாநாட்டில் அனைவருக்கும் சரியான நாற்காலிகள், அதில் உடல்நிலை பாதிக்கப்படுபவர்களுக்கான ஆம்புலன்ஸ் வசதி என அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் விஜய்.

மேலும் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கான கழிவறை வசதி உட்பட இதுவரை மற்ற கட்சிகள் செய்யாத அளவிற்கு மாநாட்டை சிறப்பாக ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் பிளக்ஸ் கட்டவுட் வைக்கும் வேலைகள் தற்சமயம் நடந்து வருகிறது இதிலும் மற்ற கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் சில விஷயங்களை செய்திருக்கிறார் அந்த கட்டவுட்டுகளில் விஜய்க்கு அருகில் அம்பேத்கர் காமராஜர் மற்றும் பெரியாரின் கட்டவுட் கல் வைக்கப்பட்டு இருக்கின்றன.

பொதுவாக மாநாடு நடத்திய யாருமே காமராஜர் மற்றும் அம்பேத்கர் இருவரையும் ஒரே இடத்தில் வைத்தது கிடையாது. ஆனால் அரசியல் ரீதியாக சரியான அறிவு இருப்பதால் விஜய் இதை சரியாக செய்திருக்கிறார் இதனை தொடர்ந்து தற்சமயம் அரசியல் கட்சிகளே விஜய்யை நோக்க துவங்கியுள்ளன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version