சோலி முடிஞ்ச்.. பையன் புடிச்சிட்டான்.. சீமான் பேச்சுக்கு விஜய் கொடுத்த பதிலடி..!

TVK Party leader Vijay took to social media with an important message for his fans and followers. He urged them to steer clear of all those unnecessary political comments that tend to clutter our feeds.

கடந்த சில தினங்களாக தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்களுடைய சித்தாந்தத்தை விமர்சிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் அவர்கள் கடுமையான பேச்சுக்களை பேசி வந்தார்.

குறிப்பாக நடிகர் விஜய் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் அவை இரண்டும் என்னுடைய இரண்டு கண்கள் என்று பேசி இருந்தது முரண்பாடான விஷயமாக இருக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார் சீமான்.

உச்சகட்டமாக ஒன்று தமிழ் தேசியம் என்று ரோட்டுக்கு இந்த ஓரமாக நிற்க வேண்டும்.. அல்லது திராவிடம் என்று ரோட்டுக்கு அந்த ஓரமாக நிற்க வேண்டும்.. இரண்டும் இல்லாமல் நடுவில் தான் நிற்பேன் என்றால் லாரி ஏறி செத்து போயிடுவ என்று விஜயை கடுமையாக தாக்கினார் சீமான்.

என்ன இருந்தாலும் ஒரு கட்சி தலைவரை.. கடந்த வாரம் வரை தம்பி என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த ஒருவரை.. இன்று உங்களுடைய சித்தாந்தத்துக்கு எதிரான நிலையில் இருக்கிறார் என்பதற்காக லாரி ஏறிசெத்துப் போய்விடுவாய் என்று பேசுவதா..? என்று தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுவான இணையவாசிகளும் தங்களுடைய குரல்களை கொடுக்க தொடங்கினார்கள்.

இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகர் விஜய்  இந்த இடத்தில் நடிகர் விஜய் சண்டை செய்ய வேண்டியது தன்னுடைய அரசியல் எதிரியாக அவர் குறிப்பிட்ட திமுகவையும் தன்னுடைய சித்தாந்த எதிரியாக குறிப்பிட்ட பாஜகவையும் தான்.

ஆனால், இடையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் வம்படியாக வந்து விஜயின் சித்தாந்தங்கள் குறித்து மோசமான முறையில் பேசுவதை என்னவென்று சொல்வது..? என்று ரசிகர்கள் பலரும் ஒரு புரியாத மனநிலையில் இருந்தனர்.

இந்நிலையில், சீமானின் இந்த பேச்சுக்கு நடிகர் விஜய் பதிலடிக்கும் விதமாக சமீபத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் சில விஷயங்களை கூறியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

அதன்படி எந்த அரசியல் தலைவரையும் தரக்குறைவாக தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யக்கூடாது. நம்முடைய அரசியல் எதிரி மற்றும் சித்தாந்த எதிரி இருவருடன் மட்டும் தான் நாம் சண்டை செய்ய வேண்டும்.

அவர்களுக்கு கூட கண்ணியமான முறையில், ஆதாரங்களுடன் பதிலடி கொடுக்க வேண்டும். மற்றபடி நம்முடைய வழியில் வேறு எந்த தொந்தரவு வந்தாலும் அதனை கடந்து விட்டு செல்ல வேண்டும்.

நம்முடைய நோக்கம் வேறு.. கவனத்தை சிதறவிட கூடாது. நம்முடைய கொள்கைகளை பொதுமக்களுடன் எடுத்துச் சொல்வதில் முனைப்பாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டாம் என்று நடிகர் விஜய் ஒரே கோடாக போட்டு இருக்கிறார்.

இதன் மூலம் நடிகர் சீமான் பேச்சு எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. தொடர்ந்து பாதையில் கவனம் செலுத்துங்கள் என்று நடிகர் விஜய் இந்த விஷயத்தை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து கொண்டிருக்கிறார் என்று கருத்துக்கள் மற்றும் மீம் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Summary in English : TVK Lead Vijay emphasized the need for action on the ground, encouraging his supporters to connect with people directly and work together towards a common political agenda. It’s all about making a real impact rather than getting caught up in online debates. So, let’s rally together, keep our eyes on the prize, and channel our energy into meaningful discussions and actions that can truly benefit society!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version