என்னை மிரட்டி அதை செய்ய வச்சாங்க.. நான் ரஜினியை அடிச்சது தப்பு தான்.. VIJAYA SHANTHI பரபரப்பு பேச்சு..!

நடிகை விஜயசாந்தி ( VIJAYA SHANTHI ) மன்னன் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து தன்னுடைய பார்வையை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

பிரபல தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை விஜயசாந்தி மன்னன் படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு ஒரு காட்சியில் நடிப்பதற்கு நான் மிகவும் தயங்கினேன்.

அதுதான் நடிகர் ரஜினிகாந்தை அடிப்பது போன்ற காட்சி. அந்தக் காட்சியை மாற்றி விடுங்கள் அது இல்லாமலேயே அந்த காட்சியை நாம் இன்னும் அருமையாக காட்ட முடியும் என்று இயக்குனர் வாசு அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.

ஆனால், அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை அந்த இடத்தில் நீங்கள் ரஜினிகாந்தை அறைந்தால் தான் காட்சி தத்ரூபமாக இருக்கும் என்று கூறினார்.

நான் முடிவே முடியாது என மறுத்தேன். அதன் பிறகு ரஜினிகாந்தை என்னை தொடர்பு கொண்டு நீங்கள் எதற்கும் தயங்க வேண்டாம். தாராளமாக நீங்கள் என்னை அடிப்பது போன்ற காட்சியில் நடிக்கலாம். என்னை அடிக்கக்கூடிய ஒரு தகுதி இருக்கக்கூடிய ஒரு நடிகையாக நான் உங்களை பார்க்கிறேன்.

மிகவும் பொருத்தமாக இந்த காட்சி இருக்கும். எதுவும் தயக்கம் வேண்டாம் என ரஜினிகாந்த் என்னிடம் கூறினார்.

ஆனாலும் அந்த காட்சி படம் பார்க்க போது மீண்டும் இது குறித்த சந்தேகத்தை நான் எழுப்பினேன். நிஜமாகவே இப்படி ஒரு காட்சி வேண்டுமா..? என நான் கூறினேன்.

அதன் பிறகு இயக்குனர் வாசுவும் ரஜினிகாந்த் சாரும் என்னை மிரட்டி அந்த காட்சியில் நடிக்கும் அளவுக்கு கொண்டு வந்தார்கள்.

அதன்பிறகு ரஜினிகாந்த் என்னை மூன்று முறை அடிப்பது போன்ற காட்சிய இடம் பெற்று இருந்தது.

நானாவது ரஜினிகாந்த் சாரை ஒருமுறைதான் அடித்திருப்பேன். ஆனால், அவர் என்னை மூன்று முறை திருப்பி அடித்தார்.

அப்போது அவரிடம் நீங்கள் பெண்கள் சுதந்திரம்.. பெண்ணுரிமை எல்லாம் பேசுகிறீர்கள்.. இப்படி மூன்று முறை ஒரு பெண்ணை அடிக்கிறீர்கள் என்று அவரிடமே கேட்டேன்.

படப்பிடிப்பு தளமே சிரிப்பலையில் மூழ்கியது என தன்னுடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை விஜயசாந்தி. அந்த காலத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன் ரஜினிகாந்த் நிகரான சம்பளம் பெற்ற ஒரு நடிகை நடிகை விஜயசாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Actress Vijayashanthi recently opened up about her unforgettable experience while shooting for the classic film “Mannan.” She reminisced about the vibrant energy on set, filled with laughter and camaraderie among the cast and crew.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version