வினு சக்ரவர்த்தி ஒரு நடிகர் என தெரியும்..? ஆனா.. இந்த விஷயம் தெரியுமா..?

வினு சக்ரவர்த்தி ஒரு நடிகராக இவரை நம்மில் பல பேருக்கு தெரியும். தமிழ்

சினிமாவில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் நடிகராக நடித்து மிரட்டியுள்ளார். 

அதே சமயம், பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அசத்தி இருக்கிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை பூர்வீகமாக கொண்ட வினுசக்கரவர்த்தி கல்லூரியில் படிக்கும்போதே நாடகம் எழுதுவதில் வல்லவராம்.

அதனாலேயே இவர் பல நாடகங்களை எழுதி இயக்கியிருந்திருக்கிறார். அதற்கு பிறகு கல்லூரி முடித்ததும் காவல்துறையில் ஆய்வாளராக வேலை செய்திருக்கிறார்.

ஆறு மாதங்கள் வேலை செய்துவிட்ட பிறகு தெற்கு ரயில்வேயில் மூத்த அதிகாரியாக பொறுப்பு ஏற்று அங்கும் நான்கு வருடங்கள் வேலை செய்திருக்கிறார்.

என்னதான் இவர் அரசு பணியில்.. உயர் அதிகாரியாக இருந்தாலும் இவருக்குள் இருந்த நடிப்புத் திறமையின் காரணமாக அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கதை ஆசிரியராக தன் பயணத்தை தொடங்கினார்.

பல மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் நடிகராகவும் கலக்கிய ஒரு நடிகர்.

இவருடைய மகள் அமெரிக்காவில் பேராசிரியராகவும் மகன் லண்டனில் மருத்துவராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் 2017 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் நடிகர் வினு சக்ரவர்த்தி.

ஒரு வேளை, அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் தமிழ் சினிமா உலகம் வினு சக்ரவர்த்தி என்ற ஒரு நடிகனை பார்த்திருக்காது.

Summary in English : Actor Vinu Chakravarthy, a prominent figure in the Indian cinema industry, made a significant decision that many of his fans may not be aware of: he resigned from his government job to pursue his passion for acting. This pivotal choice underscores the depth of his commitment to the film industry and highlights the sacrifices that some artists make in order to follow their dreams.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version