ஹாஸ்பிடலில் நடிகர் விஷால் அனுமதி..! உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அதிரிச்சி அறிக்கை..!

நடிகர் விஷால் நேற்று மதகஜராஜா படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட அவருடைய தோற்றம் நடை உடை பாவனை ஆகிவற்றை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

அவருடைய பழைய மிடுக்கு, நடை, உடை, பாவனை என எதுவும் இல்லாமல் ஏதோ வயதான நபர் போல தோற்றம் அளித்தார். ஏதோ, உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் ரசிகர்களுக்கு தெரிந்தது,

உச்சகட்டமாக மைக்கை பிடிக்க முடியாத அளவுக்கு அவருடைய கைகள் நடுங்கியதை பார்க்க முடிந்தது. இது குறித்து விஷாலுக்கு என்ன ஆனது..? மனுஷனை இப்படி பாக்கவே கஷ்டமா இருக்கு.. என நேற்று இரவிலிருந்து இணைய பக்கங்களில் பலரும் புலம்பி வருகிறார்கள்.

மறுபக்கம் படக்குழு தரப்பில் இருந்தும் விஷால் தரப்பில் இருந்தும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை நலமுடன் இருக்கிறார் என்று தகவல்களை பதிவு செய்து வந்தார்கள்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி நடிகர் விஷாலுக்கு வைரல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சிகிச்சையை அவர் மேற்கொள்ள வேண்டும் மட்டுமில்லாமல் முழுமையான ஓய்வில் அவர் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இந்த காரணத்தை தான் நேற்று நாம் விசாரித்த வகையில் கூறினார்கள். பலருக்கும் பொதுவாக ஏற்படக்கூடிய வைரல் தொற்று தான் .அதன் காரணமாகத்தான் நரம்புகளில் அலர்ஜி ஏற்பட்டு தன்னுடைய உடல் பாகங்கள் மற்றும் தசையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றிருக்கிறார்.

மட்டுமில்லாமல் நேற்று அரங்கத்தில் இருந்த அதீத குளிர்ச்சி காரணமாகவும் இவருக்கு கைநடுக்கம் ஏற்பட்டது என கூறியிருந்தார்கள். இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகமும் விஷாலுக்கு வைரல் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் விஷால் பூரண நலம் பெற வேண்டி ரசிகர்கள் பலரும் தங்களுடைய பக்கங்களில் எழுதி வருகின்றனர்.

Summary in English : Actor Vishal’s doctor clarifies on his health condition. He states that actor is having viral fever and is advised to undergo treatment & complete bed rest.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version