விவேக் சார் அந்த வேலை பார்த்தது தான் எங்க கல்யாணம் நடக்க காரணம்.. அருள்செல்வி ஓப்பன் டாக்..!

Actor Vivek’s wife recently opened up about her experiences with the beloved actor, and it’s heartwarming to hear her stories. She shared how their life together was a beautiful mix of laughter, love, and unforgettable moments.

நடிகர் விவேக் அவர்களின் மனைவி அருள் செல்வி அவர்கள், அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவருடைய இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர் விவேக். கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி யாருமே சிந்தித்து கூட பார்த்து இருக்காத ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியானது. அதுதான் நடிகர் விவேக்கின் மரணச் செய்தி.

இது சினிமா ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த பேட்டியில் விவேக் அவர்களின் மனைவி அருள் செல்வி கூறியதாவது, அவர் ரொம்பவே ஹெல்த் கான்ஷியஸ் ஆக இருப்பார்.

அவருக்கு இப்படி ஆகும் என கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது. இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற படத்திற்கு வசனகர்த்தாவாக முயற்சித்து வந்த நிலையில் அந்த படத்தின் கதாபாத்திரங்களை விவரித்து எழுதி வர பாலச்சந்தர் சார் சொல்லி இரண்டு நாட்கள் நேரம் கொடுத்திருந்தார்.

அன்று இரவு முழுவதும் உட்கார்ந்து எழுதி அடுத்த நாள் விடியற்காலையில் பாலச்சந்தர் வீட்டிற்கு விவேக் சென்றதை பார்த்து அவரே ஷாக் ஆகிவிட்டார். அனைத்தையும் படித்து பார்த்த பாலச்சந்தர் சார் இந்த கதாபாத்திரத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை நீயே நடித்து விடு என்று சொல்ல அப்படித்தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் என்னுடைய கணவர் என வார்த்தைக்கு வார்த்தை சார் சார் என்று சொல்லியே நடிகர் விவேக்கின் மனைவி பேசியதை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.

எனக்கு மதுரை தான் சொந்த ஊர்.. விவேக் சாருக்கும் மதுரை தான் சொந்த ஊர்.. என்னுடைய அப்பா ஏர் ஃபோர்ஸில் வேலை செய்த காரணத்தினால் நான் படித்து வளர்ந்தது எல்லாமே வட இந்தியாவில் தான்.

கல்லூரி படிக்கும் போது தான் சென்னைக்கு வந்தேன். அப்போது ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விவேக் சார் வந்திருந்தார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து என்னுடைய மேடம் ஒரு லெட்டர் கொடுத்து அம்மாவிடம் கொடுக்க சொன்னார்.

அந்த லெட்டரில் என்னை பெண் கேட்டிருந்தனர். எங்க அம்மாவும் உடனடியாக சம்மதம் தெரிவித்த விட்டார். அதன் பிறகு எங்களுடைய திருமணம் நடைபெற்றது என கூறினார்.

பொதுவாக சினிமாக்காரங்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். எப்படி எளிதாக பெண் கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அருள்செல்வி அவர்கள், இது குறித்து நான் அவரிடமே கேட்டேன். அவர் கூறியதாவது, நான் தலைமை செயலகத்தில் ஒரு வேலையில் இருக்கிறேன். பொழுதுபோக்குக்காக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி.. நான் ஒரு அரசு பணியாளர் என்ற முறையில் தான் உன்னை பெண் கேட்டோம். அதன் பிறகு தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள் என கூறினார். என்று பதிவு செய்திருக்கிறார்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் அதிகமாக வர வர தன்னுடைய வேலையை ராஜினாமா விட்டு முழு நேர நடிகராக மாறிவிட்டார் விவேக் எனவும் கூறியிருக்கிறார். மேலும் என்னையும் என் குழந்தைகளையும் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து சொல்ல மாட்டார்.

வீட்டுக்கு வந்து விட்டால் கணவராகவும், அப்பாவாகவும் தான் இருப்பார். வீட்டில் நான் ஒரு நடிகர் என்றும் சினிமா சம்பந்தப்பட்ட எந்த வேலைகளையும் கவனிக்க மாட்டார்.

சினிமா அவருக்கான பாதை என்றும் அதற்குள் குடும்பம் வர வேண்டாம் என்றும் சொல்லி சொல்லியே குழந்தைகளை வளர்த்தார் என்று அவருடைய மனைவி அவள் விகடன் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Summary in English : Actor Vivek’s wife recently opened up about her experiences with him, sharing some heartwarming and candid moments that truly capture their unique bond.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version