“ராஸ்கல் தொலைச்சிடுவேன்..” திருமணம் முடிந்த கையோடு மாலையை தூக்கி வீசிய ரஜினிகாந்த்..! என்ன நடந்தது தெரியுமா..?

You won’t believe this amusing mix-up that happened on the wedding day of the legendary actor Rajinikanth!

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய திருமணத்திற்கு பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை. திருமணத்திற்கு முன்பே பத்திரிகையாளர்களை அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து யாரும் என்னுடைய திருமணத்திற்கு வர வேண்டாம் என்று கூறியவர் நடிகர் ரஜினிகாந்த். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால், திருமணத்தன்று நடந்த சம்பவம் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் கண்ணதாசன் சமீபத்தில் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் போட்டு உடைத்து இருக்கிறார்.

அதில், அவர் கூறியதாவது. ரஜினிகாந்த் தன்னுடைய திருமணத்திற்கு முன்பு பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்து யாரும் நம்முடைய திருமணத்திற்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி பத்திரிக்கையாளர் யாரும் செல்ல வேண்டாம் என்று தீர்மானத்தை வைத்திருந்தோம். ஆனால், எங்களுடைய நிறுவனத்தில் இருந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சில பத்திரிகையாளர்கள் திருப்பதிக்கு சென்று விட்டோம்.

அங்கே கேமராவுடன் இருக்கும் யாரையும் அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் என்று தெரிந்தாலே அவர்களை விரட்டுவதற்கு தயாராக இருந்தார்கள். ஆனால், ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் தனிப்பட்ட முறையில் ஒரு புகைப்படக் கலைஞரை அங்கே அழைத்து வந்திருந்தார்.

அவர் ரஜினிகாந்துக்கு ஆள் உயரத்தில் மாலை போட்டு புகைப்படம் எடுத்தார். இதனை பார்த்து கடுப்பான நடிகர் ரஜினிகாந்த் ராஸ்கல் தொலைச்சிடுவேன்.. எதுக்கு போட்டோ எடுக்குற என்று மாலையை கழட்டி வீசினார்.

ஏனென்றால் அந்த நபர் பத்திரிகையாளர் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். அதன்பிறகு தான் அவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் தலைவர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தனிப்பட்ட புகைப்பட கலைஞர் என்பது தெரிந்து ஆஸ்வாசமானார் என கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் கண்ணதாசன் அவர்கள். 

Summary in English : So, here’s a fun little tidbit from the wedding day of the legendary actor Rajinikanth. Picture this: it’s a beautiful day, love is in the air, and everyone is buzzing with excitement. But amidst all the wedding chaos, our favorite superstar had a hilarious mix-up!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version