என்ன கொடுமை இது..? காசு இல்லாமல் அமிதாப் பச்சனிடம் பணம் கேட்ட ரத்தன் டாடா..!

இந்திய தொழில்துறை வரலாற்றில் நீங்காத இடம் பிடித்து இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த ரத்தன் டாடா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் இவரின் இழப்பானது இந்தியா முழுவதும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். 

இவர் இந்தியாவைத் தாண்டி உலக நாடுகள் பலவற்றிற்கும் பல்வேறு தொழில்களில் முதலீடுகள் மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களையும் நடத்தி வந்தவர். இதனால் இவரது இழப்பு உலகத்திற்கே ஒரு மிகப்பெரிய இழப்பாக அமைந்திருந்தது.

என்ன கொடுமை இது..

இவரின் இறப்புக்குப் பிறகு இவரைப் பற்றிய விஷயங்கள் பல இணையங்களில் வேகமாக பரவியதோடு மட்டுமல்லாமல் இவர் செய்த சாதனைகள் பற்றியும் பகிரப்பட்டது. இது இளம் தலைமுறைகினருக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில் இருந்தது. 

இந்நிலையில் அட என்ன கொடுமை இது என்று சொல்லக்கூடிய வகையில் ரத்தம் டாடா கையில் பணம் இல்லாமல் அமிதாப்பச்சனிடம் பணம் கேட்ட விஷயமானது தற்போது இணையம் எங்கும் பரவி வேகமாக மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. 

இந்த விஷயமானது அண்மையில் சோனி டிவியில் நடந்த பேட்டி ஒன்றில் அமிதாபச்சன் கூறிய தகவலை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது.

காசு இல்லாமல் அமிதாப் பச்சனிடம் பணம் கேட்ட ரத்தன் டாடா..

இந்த விஷயத்தை பொருத்த வரை அமிதாப் பச்சன் ரத்தன் டாடா உடன் லண்டனுக்கு விமானத்தில் சென்ற போது இருவரும் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கிய பின்பு ரத்தன் டாடாவால் அங்கு இருக்கும் தனது ஊழியர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதை அடுத்து விமான நிலையத்தில் இருந்த போன் பூத்தில் இருந்து அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது அவரிடம் பணம் இல்லாமல் இருந்தது. இதை அடுத்து சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி என்னிடம் வந்து அமிதாப் நான் உங்களிடம் இருந்து சிறிது பணம் கடன் பெற முடியுமா? என்று கேட்டிருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் போன் கால் பண்ண பணம் இல்லை என்று தன்னிடம் பணம் வேண்டும் என்று ரத்தம் டாட்டா கேட்ட விஷயத்தை தான் அண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அமிதாப்பச்சன் கூறி இருக்கிறார். 

இதை அடுத்து ரத்தன் டாடாவின் இந்த வேண்டுகோளை கண்டு வியந்ததோடு மட்டுமல்லாமல் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்ததாகவும் இதன் மூலம் ரத்தம் டாடாவின் எளிய குணத்தை நாம் அறிந்து கொள்ள முடியும் என்று ரத்தம் டாடாவை பாராட்டும் படி அமிதாப்பச்சன் பேசியிருக்கிறார். 

மேலும் இது உங்களுக்கு மிக நன்றாக தெரியும் அமிதாப்பச்சன் ட்விட்டரில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். இந்த சுவாரசியமான தருணத்தை அவர் ட்விட்டர் வாயிலாக தெரிவித்திருக்கலாம். ஆனால் ரத்தன் டாடாவின் எளிய குணத்தை பல கோடி மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் டாட்டாவின் மறைவுக்குப் பிறகு சரியான நேரம் பார்த்து Kaun Banega Crorepati நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போது அமிதாப்பச்சன் வெளிப்படையாக கூறுகிறார். 

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version