தன்னை விட 20 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் அனுஷ்கா – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 

நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தமிழில் முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு வெளியாகிய இரண்டு என்னும் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு அவர் நடித்து இரண்டே இரண்டு படங்கள்தான் வெளிவந்தன. ‘பாகமதி, சைலன்ஸ்’ ஆகிய இரண்டு படங்களில் மட்டும்தான் அவர் நடித்தார். 

 

‘சைரா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்தார். சமீபத்தில், பேட்டியொன்றில், ”சினிமா துறையில் பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் எல்லா காலத்திலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி நடக்கவே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். 

 

நடிக்க வந்த புதிதில் எனக்கும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அந்த அழைப்புக்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். அதன் பிறகு, யாரும் என்னைத் தொல்லை செய்யவில்லை” என்றிருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி இவர் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகரித்தார். 

 

ஆனால் அதன்பிறகு நினைத்தது போல் இவரால் உடலை குறைக்க முடியவில்லை, மேலும் இவர் பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகத்தில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக உயர்த்திக் கொண்டார்.. இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்து தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். 

 

ஆனால், அப்படம் விவகாரமான கதை கொண்ட படம் என்கிறார்கள். படத்தில் 40 வயது பெண் கதாபாத்திரத்தில அனுஷ்கா நடிக்கப் போகிறாராம். அவர் படத்தில் 20 வயது இளைஞனரைக் காதலிக்கும் கதாபாத்திரமாம். 

 

20 வயது இளைஞராக ‘ஜதி ரத்னலு’ படத்தில் நடித்த நவின் பொலிஷெட்டி நடிக்கப் போகிறார். நிஜ வாழ்க்கையிலும் 40 வயதைத் தொட்டுள்ள அனுஷ்கா இன்னமுத் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version