“கைய குடுனே..” – வெளியான “அரண்மனை 3” ராஷி கண்ணா-வின் புகைப்படங்கள் – காலியான ரசிகர்கள்..!

 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நாயகியாக வலம் வருபவர் ராஷி கண்ணா. ‘தோழி ப்ரேமா’, ‘பெங்கால் டைகர்’, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

 

தமிழிலும் ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘அரண்மனை 3’ படத்தில் நடித்து வருகிறார்.

 

கடந்த 2014ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் அதனை தொடர்ந்து அரண்மனை திரைப்படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் வெளியானது. 

 

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்கியுள்ளார் சுந்தர் சி. ஆர்யா நடித்துள்ள இந்தப்படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், சம்பத், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்பொது நடைபெற்று வருகிறது. 

 

இந்த திரைப்படத்தை சுந்தர் சி யின் அவ்னி மூவிஸ் சார்பாக குஷ்பு தயாரித்துள்ளார். விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு தற்போது ‘அரண்மனை 3’ படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. 

 

குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. அதன்பின்னர் ஏற்பட்ட கொரோனா மற்றும் ஊரடங்கு அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. 

 

தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

 

இதில், ராஷி கண்ணாவின் கிளாமரை பார்த்த ரசிகர்கள், கைய குடுனே.. என்று சுந்தர் சி-க்கு பாராட்டுகளை தெரிவித்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version