திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை தேவி நடிப்பிலிருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்தபோது, அவர் சினிமா மற்றும் சீரியல் தொழில்துறையை விட்டு வெளியேறினார் என்று கருதப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். மேலும், தனது மகளையும் நல்ல முறையில் வளர்த்து வருகிறார்.
நடிகையாக இருந்த போது அவர் கவனித்து வந்த மற்றும் திருவனந்தபுரத்தில் பூட்டிக் கிடந்த தனது பரதநாட்டிய பள்ளியை மீண்டும் தொடர்ந்தார், இதன் மூலம் தேவி மீண்டும் கவனத்தை ஈர்த்தார்.
வி. கே. பிரகாஷ் திரைப்படமான திருவனந்தபுரம் லாட்ஜில் ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் மீண்டும் வந்தார். இந்த பாத்திரம் அவர் நடிப்பிலிருந்து வெளியேறுகிறார் என்ற வதந்திகளை அகற்றியது மட்டுமல்லாமல், மேலும் பல நடிப்பு வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்தது.
நடிகை தேவி அஜித் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார். இது தல அஜித்தின் என்னை அறிந்தார் படமாகும். இப்படத்தில் நடிகர் தலைவாசல் விஜய்யின் மனைவியாக தேவி நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்து குறித்து தேவி கூறுகிறார், “இதற்கான அழைப்பை நான் பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அதற்காக நான் பல மாதங்களுக்கு முன்பு ஆடிஷன் செய்தேன். அவருடனான எனது முதல் ஷாட் ஒரு திருமண காட்சி, அங்கு அஜித்தின் கதாபாத்திரம் த்ரிஷாவை திருமணம் செய்வது போன்றது.
அஜித் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார், நாங்கள் சந்தித்தபோது வணக்கம் மேடம் என்று கூறினார். பெரும்பாலான நடிகர்கள் ஷூட்டிங் முடிந்ததும் கேரவேனுக்குள் சென்று விடுவார்கள்.
ஆனால், அஜீத் மற்ற குழுவினருடன் நேரத்தை செலவிட விரும்பினார். மலையாள படங்கள் மற்றும் அவரது மனைவி ஷாலினி பற்றி நாங்கள் நீண்ட நேரம் அமர்ந்து பேசினோம். மேக்கப் இல்லாமல் கூட அவர் மிகவும் அழகாக இருந்தார். நான் ஒரு பெரிய நடிகர் என்ற பகட்டே இல்லாமல் அவ்வளவு இயல்பாக இருந்த அஜித்தை பார்த்து வியந்தேன் என்று கூறினார்.
இந்நிலையில், வெறும் முண்டாபனியன் , குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் 50 வயசுல இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.