10 நிமிஷத்துல முடிச்சுடுவேன்.. அப்போ இருந்தே அந்த பழக்கம் இருக்கு.. அபிராமி வெங்கடாச்சலம் ஓப்பன் டாக்..!

நடிகை அபிராமி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிகமாக வெப் சீரிஸ்களில் நடித்தவர்.

விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். எந்நேரமும் பிக்பாஸ் வீட்டுக்குள் கண்ணீரும் கம்பலையுமாக இருந்த ஒரே பெண் போட்டியாளர் இவராக தான் இருப்பார்.

அப்போது மற்றொரு போட்டியாளராக இருந்த வனிதா விஜயகுமார், அபிராமி அட்வைஸ் செய்துக்கொண்டே இருந்தார்.

இந்நிலையில் அஜீத்குமார் லாயராக நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில், அபிராமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிராமி..

அபிராமி, ஒரு மாடலிங் ஆக தன் வாழ்க்கையை துவங்கியவர். மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர்.

காற்று வெளியிடை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடிக்க ஆடிஷன் சென்ற நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் வாய்ப்பு அபிராமிக்கு கிடைத்தது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க அபிராமி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். பல டிவி நிகழ்ச்சி சேனல்களிலும் அபிராமி பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புடவை தான்..

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அபிராமணி கூறுகையில், 10 நிமிஷத்துல வெளியே கிளம்பணும் அப்படீன்னா கண்டிப்பா அது புடவை தான். அதுதான் ரொம்ப ஈஸி. புடவை

ஒரு நாலு நிமிஷத்துல ஒடம்புல சுத்தி கட்டிடலாம். மேக்கப் அப்படீன்னா காஜல், ஐ லைனர் தான். அதை ஈஸியா முடிச்சிடலாம். கலா ஷேத்ரால டைம்ல இருந்தே எனக்கு அந்த பழக்கம் இருக்கறதால டக் டக் டக்குன்னு முடிச்சிடுவேன்.

பின்னே இல்லாட்டி கூட புடவையை சீக்கிரமா கட்டீடுவேன். புடவை கட்டறதுக்கு எல்லாம் டைம் ஆகுதுன்னு சொல்றது எல்லாம் பிராடு.

புடவை கட்டறதும், காஜல், ஐ லைனிரிங், பொட்டு வெச்சுட்டு கிளம்புறது ரொம்ப ஈஸி. டக்குன்னு ரெடியாகி, டக்குன்னு வந்திடலாம் என்று கூறியிருக்கிறார் அபிராமி.

இப்படி 10 நிமிஷத்துல புடவை கட்டறதை முடிச்சுடுவேன், கலாஷேத்ரால இருந்தப்போ இருந்தே அந்த பழக்கம் இருந்ததாக கூறியிருக்கிறார் அபிராமி வெங்கடாச்சலம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version