நான் இந்த நடிகையின் சக்களத்தியா..? – நடிகை அபிதா கூறிய பரபரப்பு தகவல்..!

அட.. என்னய்யா.. சொல்றீங்க.. ராமராஜன் நளினியை விவாகரத்து செய்ய நடிகை அபிதா தான் காரணமா?. இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து நடிகை அபிதா கூறிய பரபரப்பு தகவல்களை கேட்டு ரசிகர்கள் அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

அபிதா..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அபிதா தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளி வந்த சேது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் பல வந்து சேர்ந்தது. அந்த வகையில் எட்டு பட்டி ராசா, கோல்மால், சீறி வரும் காளை, பூவே பெண் பூவே, அரசாட்சி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சேது படத்தில் நடித்ததற்கு பிறகு இவருக்கு சீறி வரும் காளை என்ற படத்தில் நடிகர் ராமராஜனுடன் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து அந்த படத்தில் நடிக்கும் போது இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் அதிகளவு எழுந்து வந்தது.

இதனை அடுத்து இந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் நான் அந்த நடிகையின் சக்காளத்தி என்று பலரால் பேசப்பட்ட நடிகை அபிதா தற்போது பரபரப்பான தகவல்களை அது குறித்து பகிர்ந்திருக்கிறார்.

ராமராஜன் விவாகரத்து..

மேலும் இந்த கிசுகிசு நீண்ட காலம் சுற்றி, சுற்றி வந்து கொண்டு இருப்பதால் அதற்கு உரிய விளக்கத்தை தந்த நடிகை அபிதா பேட்டி ஒன்றில் பேசும் போது ராமராஜன் நளினி பிரிவுக்கும், விவாகரத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்கு நான் காரணம் அல்ல என்பதை மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இன்று வரை நடிகை நளினியை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது. அப்படி இருக்கும் போது எப்படி இது போன்ற வதந்திகள் கிளம்பியது என்று தெரியவில்லை.

அந்த படத்தில் நடிக்கும் போது ஷூட்டிங்கில் எனது காட்சிகள் முடிந்து விட்டால் நான் எனக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு திரும்பி விடுவேன். ஆனால் என்னைப் பற்றி எப்படி இப்படி ஒரு வதந்தி பரவியது என இன்று வரை புரியவில்லை என கூறினார்.

எனவே நடிகர் ராமராஜன் திருமண வாழ்க்கை முறிவு தொடர்பாக பரவி வரும் வதந்தைக்கு காரணம் நான் இல்லை என்று திருமதி செல்வம் புகழ் சீரியல் நடிகை அபிதா விளக்கம் அளித்து விட்டார்.

தற்போது திருமணமாகி பிள்ளை குட்டி என்று செட்டிலாக இருக்கும் நடிகை அபிதா தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சீரியலில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பார் என தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ராமராஜன் விவாகரத்துக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதை அடுத்தாவது இனி மேல் இது போன்ற வதந்திகள் கிளம்பாமல் இருக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏனெனில் பரபரப்புக்காக இது போன்ற வதங்கிகளை கிளப்பி விடும் நபர்களின் எண்ணிக்கை இன்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவரும் அது குறித்து விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version