மூன்று தலைமுறைகளாக நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள்..!

சினிமா, அரசியல் இரண்டையும் பொருத்தவரை வாரிசுகள் அதிகமாக வருகின்றனர். அதற்கு காரணம் சினிமா மற்றும் அரசியலை போல பெரிய புகழும், கோடிக்கணக்கில் பணம் கொட்டுவதும் இந்த இரண்டிலும் மட்டும்தான்.

அந்த வகையில், அப்பா மகன் பேரன், அப்பா மகன், பேத்தி என மூன்று தலைமுறைகளாக நடிக்கும் நடிகர் நடிகையர் உள்ளனர். ஆனால், பலரும் இந்த கோணத்தில், மூன்று தலைமுறை நடிகர்களாக அவர்களை யோசித்திருக்க மாட்டார்கள்.

அந்த வகையில் கன்னட நடிகர் சித்தலிங்கய்யா மகன்தான் நடிகர் முரளி. தமிழில் இதயம், வெற்றிக்கொடி கட்டு, சுந்தரா டிராவல்ஸ் போன்ற பல படங்களில் நடித்தவர். இவரது மகன் அதர்வா, பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். பரதேசி, ஈட்டி, 100, சண்டி வீரன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

அடுத்து நடிகர் முத்துராமன் மகன், நவரச கார்த்திக். அவரது மகன்தான் கவுதம் கார்த்திக். அதே போல், நடிகர் வினோத் ராஜ், கில்லி படத்தில் திரிஷாவின் தந்தையாக நடித்திருப்பார். அவரது மகன் சியான் விக்ரம், முன்னணி நடிகராக இருக்கிறார். சியான் விக்ரம் மகன்தான் துருவ் விக்ரம்.

பழம்பெரும் நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு. ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறாத ஒரு நடிகர். இவரது மகன் ராஜேஷ், வளரும் நடிகராக இருக்கிறார்.

அடுத்து நடிகர் ரவிச்சந்திரன் மகன் அம்சவர்த்தன். சில படங்களில் நடித்தார். பெரிய வெற்றியில்லை. அதேபோல், ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா ரவிச்சந்திரன், கருப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கமலா மகள் உமா ரியாஸ், அவரது மகன்தான் ஹாரிஹாசன். குமாரி ருக்மணி மகள்தான் லட்சுமி. அவரது மகள்தான் ஐஸ்வர்யா. ராசுக்குட்டி, உள்ளே வெளியே படங்களில் நடித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு. பிரபுவின் மகன் விக்ரம்பிரபு நடித்து வருகிறார்.

அதே வரிசையில் கன்னட நடிகர் சக்தி பிரசாத். அவரது மகன்தான் ஆக்‌ஷன் கிங். இவரது மகள் ஐஸ்வர்யாவும் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி 3 தலைமுறை நடிகர், நடிகையர் தமிழ் சினிமாவில் காணப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version