கவுண்டமணியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமா பற்றி பேசும்போது யாராக இருந்தாலும் நடிகர் கவுண்டமணியை பற்றி பேசாமல் தவிர்த்துவிட்டுச் சென்றுவிட முடியாது. ஏனெனில் தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ஒரு நட்சத்திர நடிகராக இருப்பவர் கவுண்டமணி. அவரை போல நக்கல், நையாண்டி செய்ய வேறு எந்த நடிகரும் இதுவரை இல்லை என்றே சொல்லலாம்.

கவுண்டமணி, செந்தில் காம்பினேஷன் இருந்தால் அந்த படம் வெற்றி என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் காமெடியே பல படங்களை ஓட வைத்திருக்கிறது. படம் பார்க்க வரும் ரசிகர்கள், படம் எப்படியிருந்தாலும் கவுண்டமணி, செந்தில் காமெடியை ரசிக்கலாம் என்ற கோணத்தில் கூட பல படங்களுக்கு வருவது உண்டு.

இதுகுறித்து நடிகர் ராமராஜன் அளித்த ஒரு நேர்காணலில், இளையராஜா இசை, ராமராஜன் கதாநாயகன், கவுண்டமணி, செந்தில் காமெடி இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் என்பதுதான் கணக்கு. இந்த காம்பினேஷனில் இதுவரை வெற்றி பெறாத படங்களே இல்லை என்று கூறியிருந்தார்.

அப்படிப்பட்ட கவுண்டமணி சொத்து மதிப்பு பல கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் கவுண்டமணிக்கு சொந்தமாக உள்ள வீட்டின் மதிப்பு ரூ. 2 கோடி என்று சொல்லப்படுகிறது. அவர் பயன்படுத்தும் ஆடி ஏ7 காரின் விலை 88 லட்சம் ரூபாய். அவரது சொந்த ஊரான கோவை, கண்ணம்பாளையத்தில் பல ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பும் பல கோடிகள் இருக்கும். மேலும், பொள்ளாச்சியில் உள்ள சொந்த வீட்டில் கவுண்டமணியின் தாயார் வசித்து வருகிறார்.

கோவை பகுதியில் ஷூட்டிங் நடந்தால், கவுண்டமணி பொள்ளாச்சிக்கு சென்று அங்குள்ள தனது வீட்டில்தான் தங்குவார். வயது 80 கடந்தும் சினிமாவில் கவுண்டமணி நடிக்கிறார். 49 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை, வாய்மை போன்ற படங்களில் நடித்த போது கோடிக்கணக்கில் கவுண்டமணி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version